Vegetables : கிடு,கிடுவென உயர்ந்த தக்காளி வெங்காயம் விலை.!! ஒரு கிலோ அவரை, வெண்டைக்காய் என்ன விலை தெரியுமா.?

First Published Jun 11, 2024, 7:48 AM IST

கடந்த சில நாட்களாக சற்று குறைந்திருந்த காய்கறிகளின் விலையானது இன்று கிடு, கிடுவென உயர்ந்துள்ளது. அந்த வகையில், தக்காளி, வெங்காயம் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் குறைந்த அளவிலேயே காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். 

vegetables

பெரிய வெங்காயம் விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறிகள் சந்தையில் தக்காளி ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

முருங்கைக்காய் விலை என்ன.?

அவரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
 

Latest Videos


 இஞ்சி விலை என்ன.?

புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 140 ரூபாய்க்கு காலிபிளவர் ஒன்று 20 முதல் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Power Shutdown in Chennai: சென்னையில் இன்று ஒரே நாளில் இவ்வளவு இடங்களில் மின்தடையா? எத்தனை மணி நேரம் தெரியுமா?

 குடைமிளகாய் விலை என்ன .?

கோவக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

click me!