ஏறி, இறங்கும் தங்கத்தின் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது. அந்த வகையில் தங்கத்தின் மீதான ஆர்வம் இந்திய மக்களிடம் அதிகமாக உள்ளது. குறிப்பாக சேமிப்பாகவும், தங்களது பெண் குழந்தைகளுக்கு திருமணத்திற்காகவும் சாதராண மக்கள் முதல் உயர் வகுப்பு மக்கள் வரை வாங்கி வருகின்றனர்.
தங்கத்தில் முதலீடு
தங்கத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீடாகவும் சமானியர்கள் மட்டும் அல்லாமல் பங்குச்சந்தை முதலீட்டாளர்களும் இது முக்கிய முதலீடாக திகழ்கிறது. இதன் காரணமாகவே நிலத்தில் முதலீடு செய்யும் மக்கள் தங்கத்தின் மீதும் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர்.
வங்கியில் பணம் செலுத்தினால் அதற்கு வட்டி விகிதம் குறைவாக உள்ளது. பாதுகாப்பான முதலீடு என்பதால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதும் விலை உயர்வுக்குக் காரணமாக உள்ளது.
மக்கள் மகிழ்ச்சி
இந்தநிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 6,630 ரூபாய்க்கும், சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 53ஆயிரத்து 040ரூபாய்க்கு விற்பனையாகிறது. தங்கத்தின் விலையானது சற்று குறைந்து வருவதால் பொது மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.