நாளை இரவு வரை கடலுக்கு பக்கத்துல போயிடாதீங்க.! உயிர் பலி வாங்கிடும்.? மீண்டும் கள்ளக் கடல் எச்சரிக்கை

Published : Jun 10, 2024, 02:37 PM ISTUpdated : Jun 10, 2024, 02:43 PM IST

நாளை இரவு வரை தமிழகத்தில் 4 மாவட்ட கடல் பகுதியில் காற்றோடு அலையின் சீற்றம் 3 அடிக்கு உயரக்கூடும் என்பதால் கடலில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

PREV
14
 நாளை இரவு வரை கடலுக்கு பக்கத்துல போயிடாதீங்க.! உயிர் பலி வாங்கிடும்.? மீண்டும் கள்ளக் கடல் எச்சரிக்கை

மீண்டும் கள்ளக்கடல் எச்சரிக்கை

தமிழகத்தில் மழையும், வெயிலும் மாறி, மாறி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்தநிலையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாக்குமரி மாவட்டங்களில் கள்ளக்கடல் நிகழ்வு ஏற்பட இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கள்ளக்கடல் என்றால் கள்ளன் என்றால் திருட்டு என பொருள். எந்தவித வானிலை முன்னறிவிப்பும் இன்றி திருடன் போல் அமைதியாக வந்து திருடிச்செல்லும் அதனை குறிக்கும் வகையில் அமைதியாக காணப்படும் கடலில் திடீரென கடல் சீற்றம் ஏற்படும் என்பதால் தான் இதை கள்ளக்கடல் என வானிலை ஆய்வாளர்கள் கூறி வருகின்றனர்.

24

10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு

இந்த கள்ளக்கடல் நிகழ்வு தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக 3 நாட்களில் 10க்கும் மேற்பட்டவர்கள் கடலில் ஏற்பட்ட அலையில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் மீண்டும் தமிழகத்தில் உள்ள தென் மாவட்டமான நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாக்குமரி ஆகிய இடங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

34

அலையின் சீற்றம் அதிகரிக்கும்

இது தொடர்பாக இந்திய கடல்சார் தகவல் மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குமரி கடல் பகுதியில் 2.6 மீட்டர் உயரத்திற்கும், ராமநாதபுரத்தில் 3 மீட்டர் உயரத்திற்கும், தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் 2.7 மீட்டர் உயரத்திற்கும் அலை எழும்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

நாளை இரவு 11.30 மணி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் அலையின் இடைவெளியும் குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், 13 முதல் 15 நொடிகளுக்கு இடையே ஒரு அலை எழும்ப வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

44

மக்களுக்கு எச்சரிக்கை

அலையின் சீற்றம் அதிகமாகவும், கடல் கொந்தளிப்பாக இருக்கும் என தெரிவித்துள்ள இந்திய கடல் சார் தகவல் மையம்,  மீனவர்கள் மற்றும் கடற்கரை பகுதிக்கு வரும் மக்கள் எச்சரிக்கை இருக்கமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதே போல  மற்ற கடலோர மாநிலங்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
 

Read more Photos on
click me!

Recommended Stories