அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 17 மாவட்டங்களில் அடிச்சு ஊத்துப்போகுதாம் மழை.. சென்னை வானிலை மையம் அலர்ட்..!

First Published Jan 5, 2024, 8:58 AM IST

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

Northeast Monsoon

வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்தே தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. டிசம்பர் மாதம் 4ம் தேதி சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக அதிகனமழை பெய்து தலைநகர் சென்னையை வெள்ளத்தால் மூழ்கடித்தது.

tamilnadu rain

அதேபோல் டிசம்பர் 17ம் தேதி ஒட்டி வளிமண்டல சுழற்சி காரணமாக தென் மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டு சென்றது. 

இதையும் படிங்க;- தூங்கும் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை.. தூக்க மாத்திரை கொடுத்தாரா முதல்வர் ஸ்டாலின்? விளாசும் அறப்போர் இயக்கம்.!

meteorological department

இந்நிலையில், கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது.

Chennai Rain

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அவ்வப்போது நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கணித்திருந்தது. 

இதையும் படிங்க;- Power Shutdown in Chennai: அப்பாடா.. சென்னையில் இன்று இந்த பகுதியில் மட்டும் 5 மணிநேரம் பவர் கட்.!

tamilnadu rain alert

இந்நிலையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல், கரூர், திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சிவகங்கை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.

click me!