தூங்கும் சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை.. தூக்க மாத்திரை கொடுத்தாரா முதல்வர் ஸ்டாலின்? விளாசும் அறப்போர் இயக்கம்.!
இதுவரை அறப்போர் கொடுத்த புகார்களில் எதிலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. பல புகார்களில் FIR கூட போடப்படவில்லை. பல முதல்கட்ட விசாரணை கூட துவக்கப்படாமல் தூசி படிந்து கிடக்கிறது.
எதிர்கட்சிகளின் ஊழல்களை பாதுகாப்பது தான் உங்கள் சமூக நீதியா? இப்படி எந்த வேலையும் செய்யாமல் இருக்க தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை எதற்கு? என அறப்போர் இயக்கம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்;- 500, 1000 என்று லஞ்சம் வாங்கும் அரசு ஊழியர்களை பிடிப்பதை தவிர கடந்த 4 மாதங்களாக எந்த வேலையும் செய்யாமல் சென்னையில் லஞ்ச ஒழிப்புத்துறை தூக்க மாத்திரை சாப்பிட்டு தூங்கிக் கொண்டு இருக்கிறது.
இதையும் படிங்க;- சாராய ஆலைகள் நடத்தும் திமுகவினருக்கு வருமானம் வந்தால் போதும் என்ற மனப்பான்மையில் திமுக அரசு- விளாசும் அண்ணாமலை
கடந்த 4 மாதங்களில் மொத்தமே 2 வழக்குகள் தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுக்கு எதுக்கு நூற்றுக்கணக்கான பேர் சீட்டை தேய்த்து கோடிக்கணக்கில் தண்ட சம்பளம் வாங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்? அறப்போர் கொடுத்துள்ள 25 ஊழல் புகார்களில் வீரமணி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய ஆளுநரிடம் அனுமதி கேட்டு காத்திருப்பதை தவிர மற்ற புகார்களில் என்ன தான் விசாரித்துக் கொண்டு இருக்கிறீர்கள்?
முன்னாள் அமைச்சர் வேலுமணி கூட்டாளிகளுக்காக சென்னை கோவை மாநகராட்சிகளில் டெண்டர்கள் செட்டிங் செய்யப்பட்ட புகாரில் நீதிமன்றம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட பிறகும் பல மாதங்களாக அந்த ஆவணங்களை தலைக்கு வைத்து குறட்டை விட்டுக் கொண்டு இருக்க தான் உங்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்களா?
* ரேஷன் துறையில் கிறிஸ்டி நிறுவனம் மீது அறப்போர் கொடுத்த 2000 கோடி ஊழல் புகாரை எப்பொழுது விசாரித்து முடிக்க போகிறீர்கள்?
* நிலக்கரி இறக்குமதியில் அதானி மற்றும் சில நிறுவனங்கள் செய்த 6000 கோடி ஊழல் புகாரை எப்பொழுது விசாரிக்க போகிறீர்கள்?
* திமுக ஆட்சியில் தமிழக மின்சார துறையில் transformerகள் வாங்குவதில் டெண்டர்கள் செட்டிங் செய்யப்பட்டு 400 கோடி கொள்ளை அடிக்கப்பட்ட புகாரை எப்பொழுது விசாரிக்க போகிறீர்கள்?
இதையும் படிங்க;- தமிழர் திருநாளை ஏழைகள் கொண்டாட வேண்டாமா? பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.1000 நிறுத்துவது நியாயமா? ராமதாஸ்.!
திமுக ஆட்சி அமைந்து 3 வருடங்கள் முடிய இருக்கிறது. இதுவரை அறப்போர் கொடுத்த புகார்களில் எதிலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. பல புகார்களில் FIR கூட போடப்படவில்லை. பல முதல்கட்ட விசாரணை கூட துவக்கப்படாமல் தூசி படிந்து கிடக்கிறது. இது தான் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடக்கும் திமுக ஆட்சியில் லட்சணமா? எதிர்கட்சிகளின் ஊழல்களை பாதுகாப்பது தான் உங்கள் சமூக நீதியா? இப்படி எந்த வேலையும் செய்யாமல் இருக்க தமிழகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை எதற்கு? இழுத்து மூடிவிட்டு தமிழகத்தில் லஞ்ச ஊழலை ஒழித்துவிட்டோம் என்று அறிவித்து விடலாமே என அறப்போர் இயக்கம் கடுமையாக விமர்சித்துள்ளது.