Ladies Finger : வெண்டைக்காயை யார் சாப்பிடக்கூடாது தெரியுமா..? மீறினால் என்ன..?

First Published Apr 17, 2024, 1:43 PM IST

வெண்டைக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது பல உடல்நல பிரச்சனைகள் நீக்கும். ஆனால் சில பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் தவறுதலாக கூட இதை சாப்பிடக்கூடாது.

பலரும் வெண்டைக்காய் விரும்பி சாப்பிடுவார்கள். இதில் நமது ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் பல வகையான சத்துக்கள் உள்ளன. ஆனால், உடலில் சில பிரச்சனைகள் உள்ளவர்கள் இதை சாப்பிடக்கூடாது என்கின்றனர் நிபுணர்கள். அப்படி யாரெல்லாம் சாப்பிடக்கூடாது? இதை சாப்பிட்டால் என்ன நடக்கும் என்பதை குறித்து இங்கு பார்க்கலாம். 

அலர்ஜி உள்ளவர்கள்: அலர்ஜி உள்ளவர்கள் குறிப்பிட்ட வகை உணவுகளை சாப்பிடவே கூடாது. குறிப்பாக, வெண்டைக்காய் சாப்பிடக்கூடாது. மீறி சாப்பிட்டால் தோல் ஒவ்வாமை அல்லது இரைப்பை குடல் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. 
 

செரிமான பிரச்சனை: செரிமான பிரச்சனை உள்ளவர்களும் வெண்டைக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மீறி சாப்பிட்டால் செரிமான பிரச்சனைகள் அதிகரிக்கும். 

சிறுநீரக கல் பிரச்சனை: சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்கள் வெண்டைக்காய் சாப்பிடவே கூடாது. ஏனெனில், இது சிறுநீரக கல் பிரச்சனையை அதிகப்படுத்தலாம். எனவே, சிறுநீரகம் தொடர்பான ஏதேனும் பிரச்சனை இருப்பவர்கள் இதை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

சர்க்கரை நோயாளிகள்: உண்மையில் நீரிழிவு பிரச்சனை உள்ளவர்களுக்கு வெண்டைக்காய் நல்லது. ஆனால், அளவுக்கு அதிகமாக சாப்பிடுட்டால் 
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கடுமையாக குறையும். எனவே, அதை சாப்பிடாமல் இருப்பதே நல்லது.

இதையும் படிங்க:  Ladies finger: வெண்டைக்காயை தினமும் இப்படி சாப்பிட்டால்... சுகர் பிரச்சனையை ஓட ஓட விரட்டுமாம்..!!

வயிற்று வலி: சிலருக்கு அடிக்கடி வயிற்று வலி பிரச்சினை ஏற்படும். எனவே, இந்த பிரச்சனை உள்ளவர்கள் வெண்டைக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அது  வயிற்று வலியை மேலும் அதிகரிக்கும்.

இதையும் படிங்க:  Lady Finger Face Pack :"வெண்டைக்காய்" சாப்பிடுவதற்கு மட்டுமல்ல அழகின் பொக்கிஷத்திற்கும் கூட...எப்படி தெரியுமா?

வீக்கம் அல்லது வயிற்றுப்போக்கு: இன்றும் பலர் அடிக்கடி வாயு, வயிற்றுப்போக்கு அல்லது வீக்கம் ஆகியவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் வெண்டைக்காய் சாப்பிடுவதில் இருந்து விலகி இருக்க வேண்டும். மீறி சாப்பிட்டால் வாயு பிரச்சனை அல்லது வயிற்று உப்புசம் அதிகரிக்கும். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!