Rice In Breakfast : காலை உணவாக சாதம் சாப்பிடலாமா..? அப்படி சாப்பிடால் என்ன நடக்கும்..?

First Published Apr 16, 2024, 8:00 AM IST

காலை உணவுக்கு அரிசி சாதம் சாப்பிடலாமா..? அப்படி சாப்பிடால் என்ன நடக்கும் என்பதை குறித்து தெரிந்துகொள்ளலாம்..
 

காலை உணவுக்கு அரிசி சாதம் சாப்பிடலாமா..? என்ற சந்தேகம் பலருக்கு உண்டு. ஆனால், இது இன்றைய காலகட்டத்தில் தான் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. முன்பெல்லாம் காலை உணவாக சாதம் தான் சாப்பிடுவார்கள். 

உங்களுக்கு தெரியுமா..இன்றும் கூட பலர் தங்களது வீடுகளில் காலை உணவாக சாதம் தான் சாப்பிடுகிறார்கள். இதனால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். காரணம், இதில் கார்போஹைட்ரேட் அதிகவே உள்ளது. இப்படி பல நன்மைகளை வாரி வழங்கினாலும் இது நல்லதல்ல என்று கூறுகிறார்கள். அப்படி சாப்பிடால் என்ன ஆகும் என்று தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

நீரிழிவு நோய் அதிகரிக்கும்: உங்களுக்கு தெரியுமா.. காலையில் சாதம் சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்குமாம். மேலும் இதுவும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் அரிசியைப் பொறுத்து என்றே சொல்லலாம். அதுபோல, தேங்காய் எண்ணெய் கலந்த அரிசியை சாப்பிட்டால் அது செரிமானத்தை மெதுவாக்கும். ஒருவேளை நீங்கள் காலையில் சாதம் சாப்பிட விரும்பினால், அளவோடு சாப்பிடுங்கள்.

எடை அதிகரிக்கும்: உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் காலை உணவாக சாதத்தை ஒருபோதும் சாப்பிடாதீங்க. விரும்பினால்
அளவாக எடுத்துக் கொள்ளுங்கள். அதிகம் சாப்பிட்டால் உடல் எடை கூடும். காரணம், அரிசியில் கார்போஹைட்ரேட் அதிகமாகவே உள்ளது. மேலும், இது குறைந்த கொழுப்பு, சர்க்கரை மற்றும் சோடியம் கொண்டுள்ளது.

இதையும் படிங்க:  இனி அரிசியில் பூச்சி, புழு வராமல் இருக்க செம்ம டிப்ஸ்!! கண்டிப்பா செஞ்சு பாருங்க..

செரிமானத்திற்கு நல்லது: காலை உணவாக சாதம் சாப்பிட்டால் செரிமான ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும். மேலும் இது வயிற்றுப்போக்கு பிரச்சனையை குறைக்கவும், குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அதிகரிக்கவும் உதவுகிறது.

இதையும் படிங்க:  Curd Rice Sidedish : தயிர் சாதத்திற்கு ஏற்ற 5 பெஸ்ட் சைட் டிஷ்.. ஈஸியா செய்யலாம்.. ட்ரை பண்ணி பாருங்க..

மிதமாக சாப்பிடலாம்: நீங்கள் விரும்பினால், எந்த சந்தேகமும் இல்லாமல் அரிசியை காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், நினைவில் வைத்து கொள்ளுங்கள் அதிக அளவில் அல்ல. மிதமான அளவில் அதுதான் நல்லது. அதுபோல, காலை, மதியம் என இருவேளையும் சாதம் சாப்பிடுபவர்கள் இரவு சாப்பிட வேண்டாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

.

click me!