உங்கள் திருமண உறவு மோசமாக உள்ளது என்பதை குறிக்கும் அறிகுறிகள்.. கவனிக்காம இருக்காதீங்க..

First Published Apr 25, 2024, 10:38 PM IST

உங்கள் உறவு மோசமான நிலையில் உள்ளது என்பதை குறிக்கும் அறிகுறிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சில சமயங்களில் திருமண உறவில் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் இடையேயான தொடர்பு முடிந்துவிட்டதாக உணரலாம். விஷயங்களை சரிசெய்ய முடியும் என்றாலும், உங்கள் உறவில் இருக்கும் பிரச்சனைகள் அதிகமாகி கொண்டே இருக்கும். உங்கள் உறவு மோசமான நிலையில் உள்ளது என்பதை குறிக்கும் அறிகுறிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

உங்கள் துணையிடம் எது பேசினாலும் அது சண்டையில் போய் முடியும். எனவே பேசி சண்டை வருவதை விட பேசாமல் இருப்பதே மேல் என்று பலரும் நினைக்கின்றனர். வாதங்கள் மற்றும் வேறுபாடுகள் தொடர்ந்து குவிந்து வருவதால் அது உறவு மோசமான நிலையில் உள்ளது என்பதை குறிக்கும். எனவே முடிந்த அளவு சண்டைகளை பேசி தீர்த்துக்கொள்வது நல்லது.

மனிதர்களாகிய நாம், நமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக இணைக்கப்பட்டுள்ளோம். உங்கள் துணை உடனான தொடர்பு பலவீனமாகிவிட்டதாக நீங்கள் உணரும்போது, உறவுக்கு வெளியே நமது தேவைகளைப் பூர்த்தி செய்யப் பார்க்கிறோம். இதனால் திருமண உறவை மீறிய உறவு ஏற்படுகிறது.உங்கள் துணை உடனான விரிசல் மேலும் மோசமடைகிறது.

ஒரு கட்டத்தில் திருமண உறவு மிகவும் மோசமாகத் தொடங்கும் போது, உறவைக் காப்பாற்ற முயற்சி செய்வதை நிறுத்து விடுவீர்கள். இது தம்பதிகளுக்கு இடையேயான தூரத்தை மேலும் அதிகரித்து, அந்த உறவை அழிக்க உதவுகிறது.

சில சமயங்களில் நாம் ஒரு உறவில் சிக்கியிருப்பதாக நீங்கள் உணரலாம். ஒரு உறவில் நீங்கள் அடிமையாக இருப்பது போன்ற சூழ்நிலையை உணரக்கூடாது. அதற்கு பதிலாக, உங்கள் துணை தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை சரிபார்க்கும் போது, நமது தனித்துவம் மற்றும் நமது முன்னுரிமைகளை நாம் பாதுகாக்க வேண்டும்.

click me!