Thirumavalavan: டெல்லியில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்பே இல்லை; திருமாவின் பேச்சால் திடீர் சலசலப்பு

By Velmurugan sFirst Published May 6, 2024, 4:20 PM IST
Highlights

‘‘டில்லியில், ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் கட்சி வர வாய்ப்பு இல்லை. மன்னிக்க வேண்டும் பா.ஜ., கட்சி வர வாய்ப்பு இல்லை,’’ என்று திருச்சியில், திருமாவளவன் பேட்டியளித்தார்.

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற தேர்தலுக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அரியலுாரில் உள்ள தனியார் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தை பார்வையிடுவதற்காக, இன்று  விசிக வேட்பாளர் திருமாவளவன் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள், அரை மணி நேரம் செயலிழந்து உள்ளது. இது குறித்து, வி.சி.க வேட்பாளர் ரவிக்குமார், தேர்தல் அலுவலரிடத்தில் புகார்  அளித்துள்ளார்.

இதே போல நீலகிரி, ஈரோடு பகுதிகளில் ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட இடத்தில் உள்ள  சி.சி.டி.வி., கேமராக்கள் செயல் இழந்ததால், சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் சில குளறுபடிகள் நடந்துள்ளன. அந்தந்த தொகுதிக்கான தேர்தல் அலுவலர்கள் சி.சி.டி.வி., கேமாராக்களை பராமரித்து, கண்காணிக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில், வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க வேண்டும்.

பிரதமர் மோடி பிரசாரத்தில் பேசி வரும் கருத்துக்கள் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்று விடும் என்ற அச்சத்தில் இருப்பதை காட்டுகிறது. அதை அவர் அவ்வப்போது வெளிப்படுத்துகிறார். அதற்கான சான்றுகளாக அவரது  உரைகள் அமைந்துள்ளன. அவருடைய நிலையை மறந்து, பொறுப்பை மறந்து மிகவும் கீழிறங்கி, அவருடைய விமர்சனங்களை முன் வைக்கிறார். குறிப்பாக, ‘தாலியை பறித்து இஸ்லாமியருக்கு கொடுத்து விடுவார்’ என்ற அளவுக்கு பேசுவது, அவரது பொறுப்புக்கு அழகல்ல. அது, அவருடைய அச்சத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது.

தந்தை கிடையாது, மரண படுக்கையில் தாய்; விடா முயற்சியால் 4 பாடங்களில் சதம் அடித்து சாதித்து காட்டிய மாணவி

தொடக்கத்தில் இருந்தே, தேர்தல் ஆணையத்தின் அணுகுமுறைகள் அதிர்ச்சியளிக்கும் வகையில் தான் உள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் யார் மீது குற்றம் சுமத்தப்படுகிறதோ அவருக்கு விளக்கம் கேட்டு அறிக்கை அனுப்ப வேண்டும். பிரதமர் மோடி பிரசாரத்தில் பேசியது தொடர்பாக, தேர்தல் ஆணையம், மோடிக்கு கடிதம் அனுப்பாமல் நட்டாவுக்கு கடிதம் அனுப்பி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த அணுகுமுறை ஒருசார்பாகவும், ஆளுங்கட்சிக்கு சாதகமான அணுகுமுறையாகவும் இருக்கிறது. பிரதமரை விளக்கம் கேட்பதற்கு  கூட தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது என்பதை உறுதிப்படுத்துகிறது. தேர்தல் ஆணையம் சரியாக செயல்பட வேண்டும். வி.சி. கட்சி வேட்பாளர்கள் ஆந்திராவிலும் போட்டியிடுகின்றனர். நாங்கள் போட்டியிடாத மற்ற தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறேன்.


மகாராஷ்டிராவில் லத்துார் தொகுதியில் விடுதலைக் கட்சியின் சார்பில், வேட்பாளர் போட்டியிடுகிறார். தெலுங்கானாவில், 7 தொகுதியில்  விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள்  போட்டியிடுகின்றனர். அங்கு பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறேன். மற்ற இடங்களில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரிக்கிறோம்.

சினிமாவை மிஞ்சிய கடத்தல் சம்பவம்; சிறுமியை வன்கொடுமை செய்துவிட்டு கூலாக பெற்றோருக்கு போன் செய்த கொடூரன்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள போது, டெல்லி முதல்வரை கைது செய்திருப்பது சரியில்ல என்பதை சுட்டிக்காட்டி கண்டித்து இருக்கிறோம். இது வரை, அரசியல் வரலாற்றிலேயே அமலாக்கத்துறையினர் கைது நடவடிக்கையில் ஈடுபட்டதில்லை, என சொல்லப்படுகிறது. முதல் முறையாக, ஒரு முதல்வரை, நேரடியாக அமலாக்கத்துறை கைது செய்திருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. இது ஒரு தவறான முன்மாதிரி என்று அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். 

இதனால், இண்டியா கூட்டணிக்கு எந்தவித பின்னடைவும் ஏற்படாது. தேசிய ஜனநாயக முன்னணிக்கு (என்.டி.ஏ.,) கூட்டணிக்குத் தான் பின்னடைவு ஏற்படும். டில்லியில் ஏழு தொகுதிகளையும் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள்  கைப்பற்றும். அங்கு ஒரு இடத்தில் கூட காங்கிரஸ் கட்சி வர வாய்ப்பு இல்லை. (மன்னிக்க வேண்டும்) பா.ஜ., கட்சி வர வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் நான்கு தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி மூன்று தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இந்த ஏழு தொகுதிகளிலும் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் வெற்றி பெறும் என்று அவர் தெரிவித்தார்.

click me!