ஹாட்ரிக் ஹிட் அடிக்குமா விஷால் - ஹரி கூட்டணி? சம்மர் ஸ்பெஷலாக திரைக்கு வருகிறது ரத்னம் - ரிலீஸ் தேதி அறிவிப்பு

First Published Jan 25, 2024, 3:20 PM IST

ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகி இருக்கும் ரத்னம் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

நடிகர் விஷாலுக்கு கடந்த சில ஆண்டுகள் மிகவும் கடினமானதாகவே இருந்தது. மார்க் ஆண்டனி படம் ரிலீசாவதற்கு முன்னர் விஷால் நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் வரிசையாக தோல்வியை சந்தித்து வந்தன. இதனால் கம்பேக் கொடுக்க காத்திருந்த விஷாலுக்கு மார்க் ஆண்டனி படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் டைம் டிராவல் கதையம்சத்துடன் எடுக்கப்பட்ட இப்படம் கடந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸ் ஆனது.

சோலோவாக ரிலீஸ் ஆன இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சுமார் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. நடிகர் விஷால் நடிப்பில் வெளியாகி ரூ.100 கோடி வசூல் அள்ளிய முதல் படம் இதுவாகும். இப்படத்துக்கு பின்னர் மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய விஷால், அடுத்ததாக தன்னுடைய ஆஸ்தான இயக்குனரான ஹரி உடன் கூட்டணி அமைத்தார். இவர்கள் கூட்டணி இணையும் மூன்றாவது படம் இதுவாகும்.

இதையும் படியுங்கள்... டாஸ்மாக்கில் சரக்கு வாங்க நின்றவர்களை அடித்து விரட்டிய விஷால்... தெறித்தோடிய குடிமகன்கள் - வைரல் வீடியோ

இப்படத்துக்கு முன்னர் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய தாமிரபரணி, பூஜை ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றியை ருசித்தன. இதனால் ஹாட்ரிக் ஹிட் கொடுக்கும் முனைப்போடு விஷாலும் ஹரியும் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் தான் ரத்னம். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார்.

அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி இருக்கும் ரத்னம் திரைப்படம் தற்போது ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த நிலையில், ரத்னம் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்து உள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 26-ந் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதையும் படியுங்கள்... அச்சு அசல் அப்படியே இருக்கே! அயோத்தி பால ராமர் கண்களோடு.. கேப்டன் கண்களை ஒப்பிட்டு வைரலாக்கும் ரசிகர்கள்!

click me!