Trisha Birthday: 40 வயதை தொட்டும்..குறையாத கிளாமர்....த்ரிஷா பிறந்த நாளில் ட்ரெண்டாகும் போட்டோ...

First Published May 4, 2022, 12:56 PM IST

Trisha Birthday: ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வரும் த்ரிஷா இன்று தனது 39 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

Trisha

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளும் ஒருவராக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவருக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. ஜோடி படத்தில் சிறு வேடத்தில் துணை நடிகையாக வந்த திரிஷா.  லேசா லேசா படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்.

Trisha

இதையடுத்து, இவருக்கு பல்வேறு பட வாய்ப்புகள் தேடி வர அஜித், விஜய், ரஜினி, கமல், சூர்யா, தனுஷ், விக்ரம், சிம்பு, விஜய் சேதுபதி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து ஏராளமான விருதுகளையும் குவித்திருக்கிறார்.

Trisha

சாமி படத்தில் மிளகாய் பொடி மாமியாக வந்தும், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஜெர்சியாக வலம் வந்து இளசுகளின் மனதை கொள்ளை கொண்டார்.

Trisha

சமீபத்தில், விஜய் சேதுபதியுடன், ஜானுவாக நடித்து இளசுகளின் கனவுக் கன்னியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டார். 

Trisha

இவர் தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்திப் படங்களும் நடித்திருக்கிறார். பிரியதர்ஷன் இயக்கத்தில் கட்டா மீத்தா’ என்ற ஹிந்தி படத்தில் நடித்துளளார். 

Trisha

த்ரிஷா திரையுலகத்திற்கு வர முக்கிய காரணமாக இருந்தது 1999ஆம் ஆண்டு தேர்தெடுக்கப்பட்ட மிஸ் சென்னை பட்டம்தான். என்று அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Trisha

கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக, சினிமாவில் ஜொலிக்கும் த்ரிஷாவின் சினிமா பயணம் பிரமிக்க வைக்கும் வகையில் உள்ளது. 

Trisha

சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் தேர்தெடுத்து நடித்து வரும் த்ரிஷா, இன்று தனது 39வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். 

Trisha

த்ரிஷா பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அழகான புகைப்படங்களை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். தற்போது இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

click me!