Rebel Box Office : பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் ரெபல்.... மூன்றே நாளில் இத்தனை கோடி வசூலா?

First Published Mar 25, 2024, 2:59 PM IST

நிகேஷ் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் மமிதா பைஜு நடிப்பில் வெளியாகி இருக்கும் ரெபல் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் பற்றி பார்க்கலாம்.

தமிழ் நாட்டில் கடந்த ஒரு மாதமாக மலையாள படங்களின் ஆதிக்கம் அதிகளவில் இருந்தது. குறிப்பாக மஞ்சும்மல் பாய்ஸ் படம் தமிழ் படங்களை ஓரங்கட்டி பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்தி வந்தது. அப்படம் தமிழ்நாட்டில் மட்டும ரூ.50 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து வரலாற்று சாதனை படைத்தது. இதுவரை தமிழ்நாட்டில் வெளியான மலையாள படங்களில் 2018 திரைப்படம் ரூ.2.20 கோடி வசூலித்து இருந்ததே சாதனையாக கருதப்பட்ட நிலையில், அதையெல்லாம் மஞ்சும்மல் பாய்ஸ் தகர்த்தெறிந்தது.

மஞ்சும்மல் பாய்ஸை தொடர்ந்து பிரேமலு என்கிற மலையாள படம் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. அப்படமும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வசூலையும் வாரிக்குவித்தது. இந்த நிலையில், இந்த படங்களுக்கெல்லாம் சவால்விடும் வகையில் ஒரு தமிழ்படமாவது ரிலீஸ் ஆகாதா என காத்திருந்த ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக கிடைத்த திரைப்படம் தான் ரெபல்.

இதையும் படியுங்கள்... "இணையும் இரு காமெடி கிங்ஸ்".. 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் களமிறங்கும் இயக்குனர் - "KMK" பட First Look இதோ!

ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்திருந்த இப்படத்தை நிகேஷ் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி இருந்தார். இப்படத்தில் ஜிவி-க்கு ஜோடியாக மலையாள நடிகை மமிதா பைஜு நடித்திருந்தார். இது கேரளாவில் உள்ள கல்லூரியில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருந்தது. கடந்த மார்ச் 22-ந் தேதி ரெபல் திரைப்படம் திரைக்கு வந்தது.

ரெபல் படத்துக்கு போட்டியாக எந்த ஒரு தமிழ் படமும் ரிலீஸ் ஆகாததால் பெருவாரியான தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது. முதல் இரு தினங்களில் இப்படம் வெறும் 1.09 கோடி மட்டுமே வசூலித்து இருந்த நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை அன்று மட்டும் ரூ.91 லட்சத்துக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸில் பிக் அப் ஆனது. இதன்மூலம் மூன்று நாட்களில் ரெபல் திரைப்படம் ரூ.2 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்து இருக்கிறது.

இதையும் படியுங்கள்... Taapsee : பேட்மிண்டன் வீரருடன் ரகசிய திருமணம்... 10 வருட காத்திருப்புக்கு பின் காதலனை கரம்பிடித்தார் டாப்ஸி..!

click me!