Ajith Net Worth : தன்னை தானே செதுக்கி.. நடிகனாக உச்சம் தொட்ட அஜித் - அவரின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு இதோ

First Published Apr 29, 2024, 12:25 PM IST

தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வரும் நடிகர் அஜித்குமாரின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Ajith Kumar

கோலிவுட்டில் எந்தவித பின்புலமும் இன்றி அறிமுகமானவர் அஜித். அமராவது படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான அஜித்துக்கு ஆரம்பகால சினிமா வாழ்க்கை வெற்றிகரமாக அமையவில்லை. அடுத்தடுத்து தோல்வி படங்களை கொடுத்த அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது ஆசை மற்றும் காதல் கோட்டை திரைப்படங்கள் தான். இதையடுத்து காதல் மன்னன், உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், உயிரோடு உயிராக என தொடர்ந்து லவ்வர் பாயாக நடித்து வந்தார் அஜித்.

Ajith, shalini

அவரை ஆக்‌ஷன் ரூட்டுக்கு அழைத்து சென்ற திரைப்படம் தான் அமர்க்களம். இப்படம் அஜித்தின் கெரியரில் ஒரு மறக்கமுடியாத திரைப்படம். ஏனெனில் இப்படத்தில் நடித்தபோது தான் அஜித்துக்கும், ஷாலினிக்கும் இடையே காதல் மலர்ந்தது. இப்படம் ரிலீஸ் ஆன பின்னர் 2000-ம் ஆண்டு ஷாலினியை கரம்பிடித்தார் அஜித். இந்த ஜோடிக்கு அனோஷ்கா என்கிற மகளும், ஆத்விக் என்கிற மகனும் உள்ளன. திருமணத்துக்கு பின்னர் தொடர்ந்து மாஸான ஆக்‌ஷன் காட்சிகளை கொண்ட படங்களில் நடிக்க தொடங்கினார் அஜித்.

Ajith salary

அந்த வகையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்த தீனா திரைப்படம் அஜித்துக்கு ஒரு செல்லப் பெயரையும் பெற்றுத் தந்தது. அப்படத்துக்கு பின்னர் அஜித்தை அவரது ரசிகர்கள் அவரை தல என அழைக்க தொடங்கினர். சினிமாவில் நடிப்பதை போல் கார் ரேஸிங்கிலும் கவனம் செலுத்திய அஜித், ஒருகட்டத்தில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்ததால் அவரின் சினிமா கெரியரும் பாதிக்கப்பட்டது. அதன்பின்னர் கார் ரேசிங்கை ஓரங்கட்டி வைத்துவிட்டு முழு கவனத்தையும் சினிமாவில் செலுத்த தொடங்கினார் அஜித்.

இதையும் படியுங்கள்... Aranmanai 4 : கொஞ்சம் சிரமப்பட்டேன்.. ஆனா.. அரண்மனை 4.. BTS புகைப்படங்கள் & வீடியோவை வெளியிட்ட தமன்னா!

Ajithkumar upcoming movies

அதன்பின்னர் அவர் நடித்த பில்லா, ஆரம்பம், வீரம் போன்ற படங்கள் வரிசையாக ஹிட் அடித்ததால் அஜித்தின் மார்க்கெட்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. தற்போது அஜித் கைவசம் இரண்டு படங்களுடன் செம்ம பிசியாக நடித்து வருகிறார். அவர் நடிக்கும் விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனியும், குட் பேட் அக்லி திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரனும் இயக்குகின்றனர். இதில் குட் பேட் அக்லி படத்தில் நடிப்பதற்காக நடிகர் அஜித்துக்கு ரூ.160 கோடி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

Ajithkumar Net Worth

தென்னிந்திய திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான நடிகர் அஜித், அண்மையில் பைக் பிசினஸ் ஒன்றையும் தொடங்கினார். விலையுயர்ந்த பைக்குகளை வாடகைக்கு விடும் அந்நிறுவனம் மூலம் நன்கு லாபம் பார்த்து வரும் அஜித், பல்வேறு தொழில்களிலும் முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி சினிமா, பிசினஸ் இரண்டிலும் கொடிகட்டிப் பறக்கும் நடிகர் அஜித்தின் சொத்து மதிப்பு சுமார் 400 கோடி இருக்குமாம். அவருக்கு சென்னையில் பல கோடி மதிப்பிலான ஒரு சொகுசு பங்களா உள்ளது. அதில் சகல வசதிகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Minmini : நீ இங்க மட்டும் பாடுனா போதும்... ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடிய பாடகிக்கு வாய்ப்பளிக்க மறுத்த இளையராஜா

click me!