வாஸ்துபடி.. இந்த ஒரு செடியை வீட்டில் வையுங்கள்.. பணத்திற்கு பஞ்சம் வராது..!!

First Published Mar 2, 2024, 12:42 PM IST

ஜேட் செடி வீட்டை அழகுபடுத்துவது மட்டுமல்லாமல், வீட்டிற்கு பணத்தை கொண்டு வரும். இப்போது இதுபற்றி நாம் தெரிந்துகொள்ளலாம்..

வாஸ்து சாஸ்திரத்தைப் பின்பற்றினால், குடும்பத்தில் அமைதி மற்றும் மகிழ்ச்சி நிலவும். இப்போதெல்லாம் பலர் இதை பின்பற்றுகிறார்கள். மேலும், வாஸ்து படி, வீட்டு முற்றத்தில் மரங்களை நடுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. 

அதிலும் சில மரங்களை வாஸ்துசாஸ்திரம் குறிப்பிடுகிறது, அவற்றை மட்டும் வீட்டில் நட்டால் வீட்டிற்கு மகிழ்ச்சி, அமைதி, செல்வம் மற்றும் ஆசீர்வாதங்கள் கிடைக்கும். அந்தவகையில், இங்கு சில உட்புற தாவரங்கள் உள்ளன. அவை வீட்டை அழகுபடுத்துவது மட்டுமல்லாமல், வீட்டிற்கு பணத்தை கொண்டு வரும். இப்போது இதுபற்றி நாம் தெரிந்துகொள்ளலாம்..
 

பொதுவாகவே, சில தாவரங்கள் மனிதர்களுக்கு உணவை கொடுக்கிறது, சிலவற்றை மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கும். ஆனால், பல தாவரங்கள் பணத்தை ஈர்க்கும் தன்மையுடையது தெரியுமா..? அது என்னென்ன என்று பார்க்கலாம் வாருங்கள்..

ஜேட் செடியை (jade plant ) பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். இதை பலர் தங்கள் வீட்டில் இருக்கும் அலுவலக மேசையிலோ அல்லது படிக்கும் மேசையிலோ வைத்திருப்பார்கள். இந்த செடி பணத்தை ஈர்க்கும் ஆற்றல் உடையது.

இதையும் படிங்க:  உங்கள் வீட்டில் செல்வம் நிலைத்து நிற்க இந்த வாஸ்து வழிமுறைகளை கடைபிடியுங்கள்..!

வீட்டின் பொருளாதார நிலை மேம்பட விரும்பினால், இந்த செடியை வீட்டின் நுழைவாயிலின் வலது பக்கத்தில் வைக்கவும். அது நல்லது. மேலும் இதை வீட்டின் பிரதான வாயிலில் வைக்கலாம்.

இதையும் படிங்க:  உங்க கையில் பணம் சேர! இந்த 7 பொருட்களை வீட்டில் வாங்கி வையுங்கள்! அதிர்ஷ்டம் தேடி வரும்..

அதுபோல், இந்த செடியை அலுவலகத்தில் தென்மேற்கில் வைத்தால் வேலை வாய்ப்பு நேர்மறையாக இருக்கும். குறிப்பாக இதை அறையில் தெற்கில் வைக்க கூடாது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

வீட்டின் கிழக்கு அல்லது வடக்கு பகுதியில் ஜேட் செடியை நட்டால் அது மங்களகரமானதாக கருதப்படுகிறது. மேலும் இந்த செடியை வீட்டின் மையப்பகுதியிலும் நடலாம்.

click me!