அந்த பிரபல நடிகருக்கு அட்வான்ஸ் கொடுத்துட்டேன்.. 3 படத்துக்கு கதை ரெடி - இயக்குனராகும் நடிகர் ஜெயம் ரவி!

First Published Feb 20, 2024, 2:49 PM IST

Director Jayam Ravi : சைரன் பட வெற்றியை தொடர்ந்த பிரபல நடிகர் ஜெயம் ரவி, தான் இயக்குனர் அவதாரம் எடுக்கப்போவது குறித்து பேசியுள்ளார்.

Jayam Movie

குழந்தை நட்சத்திரமாக ஓரிரு தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கடந்த 2003ம் ஆண்டு வெளியான பிரபல இயக்குனர் ராஜா மோகன் அவர்களின் "ஜெயம்" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நாயகனாக அறிமுகமானவர்தான் "ஜெயம் ரவி". கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு நல்ல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இன்று முன்னணி நாயகனாக திகழ்ந்து வருகிறார்.

Rituraj Singh Death: மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வரும் வழியில் மாரடைப்பு! துணிவு பட நடிகர் மரணம்.!

Ponniyin Selvan

குறிப்பாக கடந்த 2022 மற்றும் 2023 ஆகிய இரண்டு ஆண்டுகளில், வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் அருள்மொழி வர்மனாக நடித்து மக்களின் ஏகோபித்த பாராட்டுகளை பெற்று முன்னணி நடிகர்களில் பட்டியலில் நிலைத்து நிற்கிறார் ஜெயம் ரவி என்றால் அது மிகையல்ல.

yogi babu

இப்போது அவர் நடிப்பில் தொடர்ச்சியாக "பிரதர்", "ஜீனி" மற்றும் கமல்ஹாசனின் "தக் லைஃப்"  உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வரும் நிலையில் அவர் விரைவில் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளதாக கூறியிருக்கிறார். தன்னிடம் இப்பொது 3 கதைகள் உள்ளது என்றும், அதில் தனது முதல் திரைப்படத்தில் நடிக்க ஏற்கனவே யோகி பாபுவிற்கு 500 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து விட்டதாகவும் கூறியிருக்கிறார். 

மேலும் இரண்டு திரைப்படங்களில் ஒரு படத்தில் தானே நடிக்க உள்ளதாகவும், மற்றொரு திரைப்படத்தில் வேறு சில நாயகர்களை நடிக்க வைக்க உள்ளதாகவும் அவர் கூறியிருக்கிறார். விரைவில் இயக்குனர் ஜெயம் ரவியின் படம் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

புடவையில் தங்கசிலை போல் ஜொலிக்கும் ஹன்சிகா.. வைரலாகும் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்...

click me!