அப்பாவே சொல்லிட்டாரா.. அப்போ சரி.. பான் இந்தியா படமாக உருவாகும் சூர்யாவின் "கர்ணா" - ஹீரோயின் "அவங்க" தானாம்!

First Published Feb 19, 2024, 5:04 PM IST

Suriya 44 Karna : பிரபல நடிகர் சூர்யா, பாலிவுட் உலகில் கால்பதிக்கும் முதல் படம் தான் "கர்ணா". இந்த படத்தை இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கவுள்ளார். 

Kanguva

பிரபல நடிகர் சூர்யா அவர்களுடைய திரை வாழ்க்கையிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் முதல் திரைப்படமாக மாறி இருக்கிறது சிறுத்தை சிவாவின் "கங்குவா" திரைப்படம் என்றால் அது மிகையல்ல. மிக நேர்த்தியாக இந்த திரைப்படம் உருவாகி வரும் நிலையில், இப்படத்திற்கான தனது பணிகளை நடிகர் சூர்யா ஏற்கனவே முடித்து தற்போது தனது அடுத்த பட பணிகளை கவனித்து வருகின்றார்.

விதியை மீறி தீனா போட்ட திட்டம்.. மிரள விட்ட இளையராஜா! புதிய தலைவரானார் சபேசன்..!

Amir Khan

அண்மையில் பிரபல நடிகர் அமீர்கானின் மகளின் திருமணத்தில் பங்கேற்க மும்பை சென்ற நடிகர் சூர்யா அமிதாபச்சன் மற்றும் அக்ஷய்குமார் ஆகிய இவரோடு இணைந்து ஒரு விளம்பர திரைப்படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் பாலிவுட் உலகில் பிரபல இயக்குனரான ராகேஷ் இயக்கவிருக்கும் "கர்ணா" என்கின்ற இதிகாச திரைப்படத்தில் கர்ணனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நடிகர் சூர்யா.

Janhvi kapoor

பான் இந்தியா திரைப்படமாக உருவாகவுள்ள இந்த திரைப்படத்திற்கான முதற்கட்ட பணிகள் ஏற்கனவே துவங்கி விட்டதாகவும், விரைவில் அப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகளும் துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த திரைப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், அவருடைய தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான போனி கபூர் அவர்கள் கர்ணா திரைப்படத்தில் தனது மகள் ஜான்வி கபூர் நடிக்க உள்ளதை உறுதி செய்திருக்கிறார்.

காணாமல் போகும் சண்முகம்... பதறி போய் தேடி அலையும் குடும்பத்தினர் - அண்ணா சீரியல் அப்டேட்

click me!