என் வீட்டில் எந்த சோதனையும் நடைபெறவில்லை.. திட்டவட்டமாக மறுக்கும் திமுக மாவட்ட செயலாளர் சிற்றரசு!

First Published Apr 9, 2024, 11:10 AM IST

சென்னை மேற்கு மாவட்ட திமுக  செயலாளர் சிற்றரசு வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில் இதனை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

Jaffer Sadiq

டெல்லியில் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சென்னை மேற்கு மாவட்ட திமுக அயலக அணி அமைப்பாளரும் திரைப்பட தயாரிப்பளருமான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டார்.

Ameer

ஜாபர் ஜாதிக் தயாரித்த இறைவன் மிகப்பெரியவன் படத்தை அமீர் இயக்கிருந்தார். இதையடுத்து போதைப்பொருள் வழக்கில் ஆஜராக இயக்குநர் அமீருக்கு மத்திய போதைப்பொருள் தடுப்பு சம்மன் அனுப்பியதை அடுத்து ஏப்ரல் 2ம் தேதி டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் அமீர் ஆஜராகி 11 மணிநேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இதையும் படிங்க: அமைச்சர் உதயநிதியின் வலது கரமான சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சிற்றரசு வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!

Enforcement Directorate

இந்த விசாரணையில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் சென்னையில் சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. குறிப்பாக ஜாபர் சாதிக்கின் வீடு மற்றும் அலுவலகம், ஹோட்டலிலும், இயக்குநர் அமீரின் அலுவலகம், புகாரி ஹோட்டல், சென்னை மேற்கு மாவட்ட திமுக  செயலாளர் சிற்றரசு வீட்டிலும் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Chitrarasu

மக்களவை தேர்தல் நேரத்தில் திமுக மாவட்ட செயலாளர் வீட்டில் சோதனை என்பது பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. குறிப்பாக திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதியின் வலது கரம் என அறியப்படும் சிற்றரசு வீட்டில் சோதனை திமுகவிற்கு பின்னடைவாக கருதப்பட்டது. இந்நிலையில், தனது வீட்டில் எந்த சோதனை நடைபெறவில்லை என திமுக மாவட்ட செயலாளர் சிற்றரசு விளக்கமளித்து இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். 

click me!