கோவை மக்களை குளிர்வித்த கோடை மழை; வெப்பம் தணிந்ததால் கொண்டாட்டம்

By Velmurugan sFirst Published May 14, 2024, 7:46 PM IST
Highlights

கோவையில் இன்று மாலை பரவலாக கோடை மழை பெய்த நிலையில், வெப்பம் தணிந்து பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவையில் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இந்த கோடை காலத்தில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. அதனால் பொதுமக்கள் பெரும்பாலும் வீட்டை விட்டு வெளியேவர தயக்கம் காட்டினார்கள். மேலும் வீட்டிலும்  வெப்பத்தின் தாக்கம் அதிகறித்து காணப்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினார்கள். 

ஆள் பற்றாக்குறை, செலவு அதிகம்; ராட்சத ட்ரோன்களை களத்தில் இறக்கிய மயிலாடுதுறை விவசாயிகள்

Latest Videos

இந்த நிலையில் கடந்த ஒருசில தினங்களாக கோவையில் மாலை நேரத்தில் பரவலாக லேசான மழை பெய்து வந்ததால் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இருப்பினும் காலை மற்றும் பகல் நேரங்களில் வெயில் வாட்டி எடுத்தது. 

புகார் அளித்த நபர்களை குடும்பத்தோடு காலி செய்ய துடிக்கும் கஞ்சா கும்பல் - கோவையில் பரபரப்பு

இந்த நிலையில் இன்று மாலையில் கோவை மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குறிப்பாக உக்கடம் மற்றும் அல்-அமீன் காலனி பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் கோவையில் குளிச்சி நிலவியது. அதனால் மக்கள் மிகவும் உற்சாகமடைந்தனர். மேலும் வீட்டில் இருந்த குழந்தைகள் தங்களது வீட்டின் மாடிகளில் மழையில் துள்ளி குதித்து உற்சாகமாக மழையில் நனைந்து விளையாடினார்கள்.

click me!