காலையில் காபி குடிக்க சிறந்த நேரம் எது தெரியுமா? நிபுணர்கள் விளக்கம்..

First Published Mar 25, 2024, 8:26 AM IST

காலை எழுந்த பிறகு ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கு பிறகு காபி குடிப்பது நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பெரும்பாலான இந்தியர்களின் தவிர்க்க முடியாத பழக்கங்களில் ஒன்று காலையில் காபி குடிப்பது. தினமும் காலை ஒரு கப் டீ அல்லது காபி உடனோ தங்கள் நாளை தொடங்குகின்றனர்.

காபி அல்லது டீ குடிக்காமல் இருக்கவே முடியாது என்ற நிலையில் கூட சிலர் இருப்பார்கள். தினமும் காபி அருந்துவதில் எந்தத் தீங்கும் இல்லை, ஆனால் அளவுக்கு அதிகமாக காபி குடிப்பதால் பல தீங்கு விளைவிக்கும்.

காபி குடிப்பதால் பல நன்மைகள் உள்ளன, காபியில் உள்ள காஃபின் ஆற்றல் அளவை அதிகரிக்கவும், விழிப்புணர்வை அதிகரிக்கவும், அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவும், உடல் செயல்பாடுகளின் போது செயல்திறனை மேம்படுத்தவும் உதவும். காபி நுகர்வு வகை 2 நீரிழிவு நோயை உருவாக்கும் அபாயத்துடன் தொடர்புடையது என்று ஆராய்ச்சி கூறுகிறது, இதற்கு அதன் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக இருக்கலாம். 

ஆனால் காபி குடிக்க சிறந்த நேரம் எது தெரியுமா? காலை எழுந்த பிறகு ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கு பிறகு காபி குடிப்பது நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். காலை எழுந்த உடன் ஒரு கிளாஸ் தண்னீர் குடித்துவிட்டு, அதன்பின்னர் 2 மணி நேரத்திற்கு பின்னர் தான் காபி குடிக்க வேண்டுமாம்

முடிந்தால் காலை உணவு சாப்பிட்ட பிறகு காபி குடிக்கலாம் என்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இது உங்கள் உடலை ரீஹைட்ரேட் செய்யவும் மற்றும் நாள் முழுவதும் உங்கள் ஆற்றல் பயன்பாட்டிற்கான தயார்படுத்தும். இதன் மூலம் வெறும் வயிற்றில் காபி குடிப்பதால் சில சமயங்களில் ஏற்படும் அசௌகரியத்தையும் தடுக்கலாம்.

undefined
കാപ്പി

காஃபின் வயிற்றில் உள்ள அமிலம் மற்றும் பித்த உற்பத்தியை அதிகரிக்கிறது, இது அமில ரிஃப்ளக்ஸ் அறிகுறிகளை அதிகரிக்கச் செய்யும். இது பெருங்குடல் இயக்கத்தை அதிகரிக்கலாம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றன.

அதே போல், மதியம் 3 மணிக்குப் பிறகு காபி குடிக்க கூடாது என்றும் பரிந்துரைக்கின்றனர்., ஏனெனில் இது உங்கள் தூக்கச் சுழற்சியைப் பாதிக்கும் மற்றும் நிம்மதியான தூக்கத்தைப் பெறுவதை கடினமாக்கும், மோசமான தூக்க முறைகள் அடுத்த நாள் உங்கள் ஆற்றல் அளவை பாதிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

click me!