ஆண்களே, உங்களது 'அந்த' பகுதி சுருங்குவதற்கு இந்த மோசமான பழக்கங்களே காரணம்... உடனே நிறுத்துங்கள்!

First Published May 23, 2024, 11:15 PM IST

அன்றாட வாழ்வில் நாம் செய்யும் சில பழக்கவழக்கங்கள் நமது ஆரோக்கியத்தை சீர்குலைத்து விடுகின்றன. இந்த பழக்கங்களில் சில ஆணுறுப்பின் அளவையும் குறைக்கலாம். அவை..
 

உங்களின் சில பழக்கவழக்கங்கள் உங்கள் ஆணுறுப்பின் அளவை சுருங்கச் செய்யும் தெரியுமா..? உங்கள் ஆண்குறியின் அளவு சுருங்காமல் இருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் அதிக கவனம் செலுத்துங்கள். எனவே, சிறந்த பாலியல் ஆரோக்கியத்திற்கு நீங்கள் தவிர்க்க வேண்டிய சில பழக்கங்கள் இங்கே உள்ளன. அவை...

அதிக உடற்பயிற்சி: அதிக உடற்பயிற்சி செய்யும் ஆண்களுக்கு விறைப்புத்தன்மை மற்றும் பாலியல் செயல்பாட்டை மேம்படுத்த முடியும் என்று ஆய்வு சொல்லுகிறது. ஆனால், வழக்கமான உடற்பயிற்சி ஆண்குறி வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துமாம். ஜாக்கிரதை..

வாய் துர்நாற்றம்: இதெல்லாமா என்று நீங்கள் யோசிக்கலாம்..ஆனால், அதுதான் உண்மை. உங்களுக்கு தெரியுமா.. விறைப்புத்தன்மை குறைபாடுள்ள ஆண்களுக்கு ஈறு நோய் வருவதற்கான வாய்ப்பு ஏழு மடங்கு அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சி சொல்லுகிறது. ஒரு ஆய்வின்படி, ஈறு திசுக்களில் உள்ள பாக்டீரியாக்கள் உடல் முழுவதும் சென்று, வீக்கத்தை ஏற்படுத்தி, ஆண்குறியில் உள்ள இரத்த நாளங்களை சேதப்படுத்துமாம்.

அதிக எடை: மோசமான எடை அதிகரிப்புக்கு துரித உணவுகள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகள் தான் காரணம். இந்தமாதிரி ஆரோக்கியமற்ற உணவை அதிகம் சாப்பிட்டால், ஆண்குறியின் அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஒரு ஆய்வு சொல்லுகிறது. எனவே, உடல் பருமனை தவிர்க்க சத்தான உணவை சாப்பிடுங்கள். இல்லையெனில்,  எடை அதிகரிப்பது மட்டுமின்றி, இடுப்பு சுற்றி கெட்ட கொழுப்பு நிறைந்து இருக்கும். இதனால் ஆண்குறி சுருங்கும் வாய்ப்பு உள்ளது.

ஆரோக்கியமற்ற உணவுகள்:  ஆரோக்கிய உணவை சாப்பிடும் ஆண்களை விட ஆரோக்கிய மற்ற, அதாவது, டிரான்ஸ் கொழுப்புகள் நிறைந்த உணவுகளை தவறாமல் சாப்பிடும் ஆண்களுக்கு மோசமான விந்தணுக்கள் உருவாகுவதாக ஆய்வுகள் கூறுகிறது.

புகைபிடித்தல்: புகைபிடித்தல் ஆண்குறியின் அளவைக் கணிசமாகக் குறைக்குமாம். எப்படியெனில், சிகரெட் புகையில் உள்ள தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இரத்த நாளங்களை சேதப்படுத்துவது மட்டுமல்லாமல், விறைப்புத்தன்மையையும் ஏற்படுத்துகிறது மற்றும் ஆண்குறி திசுக்களையும் சேதப்படுத்துகிறது.

Latest Videos

click me!