Not Ajith First Choice: அஜித்துக்கு முன்பு 'தீனா' படத்தில் முதலில் நடிக்க வேண்டியது இவர் தான்! யார் தெரியுமா?

First Published May 2, 2024, 1:38 PM IST

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், அஜித் நடிப்பில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான தீனா தீனா இந்த படத்தில், அஜித்துக்கு முன்பு நடிக்க இருந்த ஹீரோ யார்? என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 

அஜித் கேங் ஸ்டாராகவும், பாசமான அண்ணனாகவும் நடித்திருந்த திரைப்படம் தீனா. இந்த திரைப்படம் வெளியாகி 23 வருடங்களுக்கு பின்னர், நேற்று அஜித்தின் 53 வது பிறந்த நாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் இந்த படத்தில் அஜித்துக்கு முன்பு ஹீரோவாக நடிக்க இருந்தது யார் என்பதை பிரபலம் ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
 

'தீனா' திரைப்படம் நடிகர் அஜித்துக்கு மட்டும் இன்றி, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸுக்கும் திரையுலகில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இந்த படத்தில் அஜித் தீனதயாளன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக நடிகை லைலா நடித்திருந்தார்.

Music Director Death: 28 வயதே ஆகும் இளம் இசையமைப்பாளர் பிரவீன் குமார் அதிர்ச்சி மரணம்! சோகத்தில் திரையுலகினர்!
 

மேலும் சுரேஷ் கோபி, திவ்யா, ஸ்ரீமன், சியாம் கணேஷ், ராஜேஷ், சீலா, உள்ளிட்டா பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தில் 'வத்திக்குச்சி பத்திக்காதுடா' என்கிற ஐட்டம் பாடலுக்கு பிரபல நடிகை நக்மா நடனமாடி இருந்தார். அதே போல் யுவன் சங்கர் ராஜா இசையில், இப்படத்தில் இடம்பெற்ற 'நீ இல்லை என்றால்', 'சொல்லாமல் தொட்டுச் செல்லும்' போன்ற பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்நிலையில் தீனா படத்தில், அஜித்துக்கு முன்பு ஹீரோவாக நடிக்க இருந்த நடிகர் பற்றிய தகவல் 23 வருடங்களுக்கு பின்னர் வெளியாகி உள்ளது. இது குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ள பிரபல நடிகர் பிரசாந்தின் தந்தை தியாகராஜன்,  தீனா படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது தன்னுடைய மகன் பிரசாந்தான். கதை பிடித்து இருந்த போதிலும், அப்போது பிரஷாந்த் நிறைய படங்களில் நடித்து வந்தார்.

விஜய் பேனரை டார் டாராக கிழித்ததற்கு போலீஸிடம் செம்ம டோஸ் வாங்கிய அஜித் ரசிகர் - மன்னிப்பு கேட்கும் வீடியோ இதோ

எனவே ஏ ஆர் முருகதாஸிடம், காத்திருக்கும் படி கூறியிருந்தார். ஆனால் அதற்குள் ஏ ஆர் முருகதாஸ் அஜித்தை வைத்து 'தீனா' படத்தை எடுத்து முடித்து விட்டதாக தெரிவித்துள்ளார். தீனா என்கிற கதாபாத்திரமாகவே அஜித் இப்படத்தில் வாழ்ந்து நடித்திருந்த நிலையில், இந்த படத்திற்கு பிரஷாந்தை விட அஜித்தே மிகவும் பொருத்தமானவர் என்பதே நெட்டிசன்களின் கருத்தாக உள்ளது.
 

click me!