Khushbu Sundar : அரண்மனை 4.. கேமியோவில் குஷ்பு.. அவங்க கூட இன்னொரு டாப் நடிகையும் நடிச்சிருக்காங்களாம்!

First Published Mar 30, 2024, 3:22 PM IST

Aranmanai 4 : பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படம் தான் அரண்மனை படத்தின் 4ம் பாகம். ஏற்கனவே இந்த படத்தின் மூன்று பாகங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

Murai Maman

கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான "முறைமாமன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குனராக அறிமுகமானவர் தான் சுந்தர் சி. தொடர்ச்சியாக "முறை மாப்பிள்ளை", "உள்ளத்தை அளித்தா", "மேட்டுக்குடி" மற்றும் "அருணாச்சலம்" என்று பல வெற்றி திரைப்படங்களை தமிழ் திரை உலகுக்கு கொடுத்தவர் தான் இவர்.

Lokesh Kanagaraj : தலைவர் 171 டைம் டிராவல் படம் இல்லையாம் - இயக்குனர் லோக்கி கொடுத்த மரண மாஸ் அப்டேட்!

Aranmanai 1

இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரபல நடிகர் வினை மற்றும் நடிகை ஹன்சிகா மோத்வானி நடிப்பில் "அரண்மனை" என்கின்ற திரைப்படத்தை இயக்கி வெளியிட்டார். அந்த திரைப்படம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. தொடர்ச்சியாக அரண்மனை 2 மற்றும் அரண்மனை 3 ஆகிய திரைப்படங்களை எடுத்த சுந்தர் சி, தற்பொழுது அப்பிடத்தின் 4ம் பாகத்தை விரைவில் வெளியிட உள்ளார்.

Simran

வருகின்ற ஏப்ரல் மாதம் அரண்மனை திரைப்படத்தின் 4ம் பாகம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் தமன்னா மற்றும் ராஷி கண்ணா உள்ளிட்ட நடிகைகள் நடித்து வரும் நிலையில், ஹிப் ஹாப் ஆதியின் இசையில் இப்படம் உருவாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தில் ஒரு கூடுதல் சிறப்பாக ஒரு பாடலுக்கு கேமியோ கதாபாத்திரத்தில் பிரபல நடிகை குஷ்பு மற்றும் தமிழ் திரை உலகின் முன்னணி நடிகையான சிம்ரனும் நடனமாட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கண்ணீருடன் டேனியல் பாலாஜி உடலுக்கு இறுதி சடங்கு செய்யும் அதர்வா மற்றும் நடிகர் முரளி குடும்பத்தினர்! வீடியோ

click me!