தள்ளிப்போகும் தனுஷ் படம்... தம்பி நடிகருடன் இணையும் மாரி செல்வராஜ் - மாமன்னன் இயக்குனரின் மாஸ் சம்பவம் லோடிங்

First Published Mar 8, 2024, 11:48 AM IST

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மாரி செல்வராஜ், தனுஷ் படம் தாமதம் ஆவதால் மற்றொரு மாஸ் நடிகருடன் இணைய திட்டமிட்டுள்ளார்.

Mari Selvaraj

தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் அசுர வளர்ச்சி கண்ட இயக்குனர்களில் ஒருவர் தான் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், தன்னுடைய முதல் படத்திலேயே சாதிய ஒடுக்குமுறை பற்றி பேசி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். இதனால் முதல் படத்திலேயே கொண்டாடப்பட்ட மாரி செல்வராஜ், அடுத்ததாக தனுஷுடன் கூட்டணி அமைத்து கர்ணன் படத்தை இயக்கினார். 

Dhruv vikram, Mari selvaraj

கர்ணன் படமும் பாக்ஸ் ஆபிஸில் வேறலெவல் ஹிட் அடித்தது. இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு இணைந்து நடித்த மாமன்னன் படத்தை இயக்கினார். கடந்தாண்டு ரிலீஸ் ஆன இப்படம் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதுவரை காமெடியனாக கொண்டாடப்பட்ட வடிவேலுவை ஒரு தரமான நடிகராக வெளிச்சம் போட்டு காட்டியது இந்த மாமன்னன் திரைப்படம் தான். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வாழை என்கிற படத்தை இயக்கி உள்ளார் மாரி செல்வராஜ்.

இதையும் படியுங்கள்... ஜோதிகாவின் 'சைத்தான்' பட நிகழ்ச்சிக்கு ஸ்டைலிஷாக வந்த சூர்யா! பாலிவுட் ஹீரோஸ் கூட பக்கத்துல நிக்க முடியாது!

Dhanush, Mari Selvaraj

வாழை திரைப்படம் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கும் ஒரு கபடி வீரரின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்க உள்ளார் மாரி செல்வராஜ். அப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. இதுதவிர தனுஷ் நடிக்கும் படமொன்றையும் இயக்க கமிட் ஆகி உள்ளார் மாரி. துருவ் விக்ரம் படம் முடிந்ததும் அவர் தனுஷ் படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதில் திடீர் டுவிஸ்ட் ஏற்பட்டுள்ளது.

Actor Karthi

அதன்படி நடிகர் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் பிசியாக உள்ளதால், மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் படம் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. தனுஷ் படம் தள்ளிப்போனதால் தன்னுடைய அடுத்த படத்தை நடிகர் கார்த்தியை வைத்து இயக்க உள்ளாராம் மாரி செல்வராஜ். துருவ் விக்ரம் படத்தை முடித்ததும் கார்த்தி பட பணிகளை தொடங்க அவர் திட்டமிட்டுள்ளாராம். கார்த்தியும் கைவசம் தீரன் 2, சர்தார் 2, கைதி 2, பிரேம் குமார் இயக்கத்தில் ஒரு படம், நலன் குமாரசாமி இயக்கத்தில் ஒரு படம் என ஏராளமான படங்களை வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... அஜித்துக்கு மூளையில் 4 மணிநேரம் நடந்த தீவிர அறுவை சிகிச்சை! தற்போதைய நிலவரம் என்ன? வெளியான அப்டேட்!

click me!