Lokesh Kanagaraj : தலைவர் 171 டைம் டிராவல் படம் இல்லையாம் - இயக்குனர் லோக்கி கொடுத்த மரண மாஸ் அப்டேட்!

First Published Mar 30, 2024, 2:33 PM IST

Thalaivar 171 Movie : சில தினங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள அவருடைய தலைவர் 171 படம் குறித்த First Look போஸ்டர் வெளியானது.

Director Lokesh Kanagaraj

தமிழ் திரையுலகில் மிக குறைந்த அளவிலான திரைப்படங்களை இயக்கியிருந்தாலும், தற்பொழுது கோலிவுட் உலகின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வருகிறார் லோகேஷ் கனகராஜ். ஏற்கனவே தனது கனவு நாயகனான உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களை வைத்து "விக்ரம்" என்கின்ற திரைப்படத்தை கொடுத்த லோகேஷ், தற்போது தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார்.

கண்ணீருடன் டேனியல் பாலாஜி உடலுக்கு இறுதி சடங்கு செய்யும் அதர்வா மற்றும் நடிகர் முரளி குடும்பத்தினர்! வீடியோ

Kamalhaasan

வருகின்ற ஏப்ரல் மாதம் 22ஆம் தேதி அந்த திரைப்படத்தின் டைட்டில் மட்டும் டீசர் வெளியாகும் என்று லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்த படத்தில் இருந்து வெளியான ஒரு போஸ்டர் இணையத்தில், அப்படத்தின் கதை குறித்த பல யூகங்களை எழுப்பியுள்ளது. குறிப்பாக இந்த திரைப்படம் "டைம் டிராவல்" திரைப்படமாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வந்தனர்.

Rajinikanth

ஆனால் இன்று லோகேஷ் கனகராஜ் பங்கேற்ற ஒரு விழாவில் அவர் பேசிய பொழுது, ரசிகர்களின் யுகங்களை தாண்டிய ஒரு படம் இது. முழுக்க முழுக்க தனது ஸ்டைலில் எடுக்கப்படும் ஒரு திரைப்படம் தான் என்றும், இதுவரை யாரும் பார்த்திராத ஒரு கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இந்த திரைப்படத்தில் நடிக்க உள்ளதாகவும் சில முக்கிய தகவல்களை வெளியிட்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களையும், தனது ரசிகர்களையும் மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார் அவர். 

Shraddha Kapoor Net Worth: முதல் படமே பிளாப்.. ஆனா சோசியல் மீடியாவில் இந்த நடிகைதான் நம்பர் 1.. யார் தெரியுமா?

click me!