Vetrimaaran : மீண்டும் இயக்குனர் அவதாரத்தில் போஸ் வெங்கட்.. கைகொடுக்கும் வெற்றிமாறன் - ஹீரோ யார் தெரியுமா?

First Published Apr 1, 2024, 8:27 PM IST

Director Bose Venkat : தமிழ் திரையுலகில் பல ஆண்டுகளாக நடிகராக அசத்தி வரும் போஸ் வெங்கட், கடந்த 2020ம் ஆண்டு வெளியான கன்னி மாடம் என்ற படத்தை இயக்கி, இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

Director Bose venkat

புதுக்கோட்டையில் பிறந்து, தமிழ் சினிமாவில் சுமார் 21 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான "ஈரநிலம்" என்கின்ற ஐயா பாரதிராஜா அவர்களுடைய திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் போஸ் வெங்கட். தொடர்ச்சியாக அவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள், இவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. 

குறிப்பாக "அரசாட்சி", "தலைநகரம்", "தீபாவளி" மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "சிவாஜி" போன்ற திரைப்படங்கள் போஸ் வெங்கட்டுக்கு நல்ல திரைப்படங்களாக அமைந்தது. இந்நிலையில் கடந்த 2020ம் ஆண்டு அவர் இயக்குனராகவும் தமிழ் திரையுலகில் களம் இறங்கினார்.

Balaji Murugadoss: பிக்பாஸ் பாலாஜி முருகதாஸுக்கு திடீர் என நடந்த ரகசிய திருமணம்? வைரலாகும் புகைப்படம்!

Vemal

"கன்னி மாடம்" என்கின்ற திரைப்படத்தை இயக்கிய போஸ் வெங்கட், மக்கள் மத்தியில் ஒரு இயக்குனராகவும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து தனது அடுத்த பட பணிகளை துவங்கியிருக்கிறார். இந்த படத்திற்கு மா.பொ.சி என்ற பெயரை அவர் சூட்டி இருக்கிறார். இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் விமல் முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடக்கின்றார்.

MaPoSi

விரைவில் இந்த திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், தற்போது இந்த திரைப்படத்தை வழங்குகின்ற பணியை ஏற்றுள்ளார் பிரபல இயக்குனர் வெற்றிமாறன். "கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி" என்கின்ற தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக இந்த திரைப்படத்தை அவர் வழங்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

Arun Vijay : "செம சிம்பிள் சார் நீங்க".. சந்தைக்கு மகனோடு சென்று மீன் வாங்கிய அருண் விஜய் - வைரலாகும் Clicks!

click me!