Dhanush Salary : என்னது ஒரு படத்துக்கு 100 கோடியா...! சம்பளத்தை ஜெட் வேகத்தில் உயர்த்திய தனுஷ் - காரணம் என்ன?

First Published Mar 29, 2024, 11:37 AM IST

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் தனுஷ், தன் சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்தி உள்ளாராம்.

dhanush

இந்திய சினிமாவிலேயே மிகவும் பிசியான நடிகராக வலம் வருபவர் தனுஷ் தான். அவர் நடிகராக மட்டுமின்றி, தயாரிப்பாளராக, இயக்குனராக என தன் கைவசம் அரை டஜன் படங்களை வைத்திருக்கிறார். அவர் நடிப்பில் தற்போது ராயன் மற்றும் குபேரா ஆகிய இரு படங்கள் தயாராகி வருகிறது. இதில் ராயன் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளதோடு, அப்படத்தை இயக்கியும் உள்ளார் தனுஷ். இது அவரின் 50-வது படமாகும். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.

Dhanush Upcoming Movies

இதையடுத்து குபேரா என்கிற படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். இப்படத்தை தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்குகிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பும் ஒருபுறம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதுதவிர நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்கிற படத்தையும் இயக்கி வருகிறார் தனுஷ், இப்படத்தின் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

இதையும் படியுங்கள்... Anushka shetty : சினிமாவில் மவுசு இல்லை... அரசியலில் குதிக்கும் அனுஷ்கா? பிரபல நடிகரின் கட்சியில் இணைய திட்டம்

Dhanush salary

மேலும் இந்தியில் ராஞ்சனா பட இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஒரு படம், தமிழில் மாரி செல்வராஜ், நெல்சன், அருண் மாதேஸ்வரன் ஆகியோர் இயக்கத்தில் தலா ஒரு படம் என தனுஷின் லைன் அப் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த லிஸ்ட்டில் லேட்டஸ்டாக இணைந்துள்ள திரைப்படம் தான் இளையராஜா பயோபிக். இப்படத்தில் நடிகர் தனுஷ் இளையராஜாவாக நடிக்க கமிட் ஆகி உள்ளார். இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார்.

Dhanush salary for Ilaiyaraaja Biopic

இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு கமல்ஹாசன் திரைக்கதை அமைக்க உள்ளார். இப்படத்தின் பணிகள் அண்மையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த நிலையில், இப்படத்திற்காக நடிகர் தனுஷ் வாங்க உள்ள சம்பளம் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி இப்படத்தை இரண்டு பாகங்களாக எடுக்க உள்ளார்களாம். அதில் ஒரு பாகத்திற்கு தலா ரூ.50 கோடி வீதம் இரண்டு பாகங்களுக்கு சேர்த்து ரூ.100 கோடி சம்பளம் பேசி இருக்கிறாராம் தனுஷ். கடைசியாக வெளிவந்த கேப்டன் மில்லர் படத்துக்காக நடிகர் தனுஷ் ரூ.30 கோடி சம்பளம் வாங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Gouri G Kishan : 96 பட நடிகரை ரகசிய திருமணம் செய்துகொண்டாரா குட்டி திரிஷா? வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்

click me!