Dhanush Vs Aishwarya Divorce: தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து! நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு.!

First Published Apr 15, 2024, 9:38 PM IST

நடிகர் தனுஷிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்பில் இருந்து குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், முக்கிய உத்தரவு ஒன்றை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
 

Aishwarya Rajinikanth

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், கடந்த 2004-ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சென்னையில் மிக பிரமாண்டமாக நடந்த இவர்களது திருமணத்தில், ஏராளமான தென்னிந்திய பிரபலங்கள் மட்டும் இன்றி அரசியல் தலைவர்களும் கலந்து கொண்டு இவர்களை வாழ்த்தினர்.
 

திருமணத்திற்கு பின்னர், தனுஷுடன் தனியாக வசித்து வந்த ஐஸ்வர்யா லிங்கா - யாத்ரா என்கிற இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்தார். மேலும் தன்னுடைய மாமனார் தாயாரிப்பில், தனுஷை வைத்து '3' படத்தையும் இயக்கினார். பயோ போலார் டிஸாடர் பிரச்சனை குறித்து பேசிய இந்த படம் இளவட்ட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றாலும், வசூல் ரீதியாக வெற்றிபெற தவறிவிட்டது.

Dharshana Marriage: பிரபல சீரியல் நடிகை தர்ஷனா அசோகனுக்கு திருமணம் முடிந்தது! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!
 

Aishwarya Rajinikanth Marriage

தனுஷின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்த ஐஸ்வர்யா என்றால் அது மறுக்க முடியாத உண்மை. எனினும் தனுஷுக்கு சில நடிகைகளுடன் இருந்த பழக்கம், தனுஷ் மீது ஐஸ்வர்யாவுக்கு வெறுப்பு வர காரணமாக அமைந்தது. பிள்ளைகளை கருத்தில் கொண்டு 18 வருடம் தனுஷுடன் சேர்ந்து வாழ்ந்த ஐஸ்வர்யா கடந்த ஆண்டு, தனுஷை விட்டு பிரிய போவதாக அறிவித்தார். 

தனுஷ் தன்னுடைய பெற்றோருக்கு 150 கோடி வீடு கட்டி தருவது, ஐஸ்வர்யாவுக்கு பிடிக்காததே இப்பிரச்சனை பூதாகரமாக வெடிக்க காரணம் என்றும் ஒரு பேச்சு அடிபட்டது. கடந்த வருடம் விவாகரத்து பெற உள்ளதை அறிவித்தாலும், இருவரும் நீதிமன்றத்தை நாடாத நிலையில்... மீண்டும் இருவரும் சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவே கருதப்பட்டது.

Dharshana Marriage: பிரபல சீரியல் நடிகை தர்ஷனா அசோகனுக்கு திருமணம் முடிந்தது! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!
 

ஆனால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், ஐஸ்வர்யா குடும்ப நல நீதி மன்றத்தில்... விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அக்டோபர் 7-ஆம் தேதி இருவரையும் கோர்ட்டில் ஆகராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

click me!