Desingu Periyasamy: இயக்குனர் தேசிங்கு பெரியசாமியிடம் பண மோசடி! காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்.!

First Published Apr 5, 2024, 7:26 PM IST

'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' திரைப்படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் தேசிங்கு பெரியசாமியிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபர் மீது, தற்போது காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 

தமிழ் திரை உலகில், இளம் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் தேசிங்கு பெரியசாமி. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்திருந்த நிலையில், ரித்து வர்மா ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் ரக்சன், நிரஞ்சனி அகத்தியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த கால இளம் ரசிகர்கள் ரசனைக்கு ஏற்ற வகையிலும், அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையிலும் இப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

அந்த ஹீரோ தான் முக்கியம்... தனுஷை டீலில் விட்ட த்ரிஷா! 'ஆடுகளம்' படத்தில் இருந்து விலக காரணம் என்ன தெரியுமா?

இந்த படத்தை பார்த்துவிட்டு, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் தேசிங்கு பெரிய சாமியை போனில் அழைத்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார். தனக்கேற்ற போல் நல்ல கதையை உருவாக்கினால் நடிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். எனவே தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தான் ரஜினிகாந்த் நடிப்பார் என பல பேச்சு அடிபட்டது.
 

Simbu, Kamal

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்திற்கு பின்னர், இரண்டு வருடம் கேப் எடுத்து கொண்ட தேசிங்கு பெரியசாமி தற்போது அவர் கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிப்பில் உருவாக உள்ள, ’எஸ்டிஆர் 48’ என்ற படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள், கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில்... வரும் ஜூன் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கனவு வீட்டை கட்டி... எளிமையான முறையில் கிரஹப்பிரவேசம் செய்த விஜய் டிவி மணிமேகலை! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!
 

இந்நிலையில், இயக்குனர் தேசிங்கு பெரியசாமி, தனது உதவி இயக்குனர்களில் ஒருவரான முகமது இக்பால் என்பவர் மீது காவல்துறையில் புகார் பண மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார். அதாவது தன்னிடம் பணியாற்றிய உதவி இயக்குனர் இக்பால் முகமது,  தனக்கே தெரியாமல் மூன்று லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டதாக தேசிங்கு பெரியசாமி புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

click me!