கனவு வீட்டை கட்டி... எளிமையான முறையில் கிரஹப்பிரவேசம் செய்த விஜய் டிவி மணிமேகலை! குவியும் ரசிகர்கள் வாழ்த்து!

First Published Apr 5, 2024, 4:10 PM IST

பிரபல தொகுப்பாளினி மணிமேகலை, லாக் டவுன் சமயத்தில் வசித்து வந்த கிராமத்தில் நிலம் வாங்கி வீடு காட்டிவந்த நிலையில், தற்போது அந்த வீட்டை கட்டி கிரகப்பிரவேசம் செய்துள்ளார். இது குறித்த போட்டோஸ் தற்போது வைரலாகி வருகிறது.
 

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அனைவராலும் அறியப்பட்டவர் மணிமேகலை. இதை தொடர்ந்து, ஹுசைன் என்பவரை மணிமேகலை காதலித்து வந்த நிலையில், பெற்றோர் மற்றும் சகோதரர்களை எதிர்த்து காதலித்தவரையே திருமணமும் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் பண ரீதியாக மிகவும் கஷ்டப்பட்ட மணிமேகலை விஜய் டிவி-யில் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் தன்னுடைய கணவருடன் கலந்து கொண்டு அசத்தினார்.

பின்னர் அடுத்தடுத்து, விஜய் டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இதன் பின்னர் குக் வித் கோமாளி சீசன் 1 நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு ரணகளம் செய்தார்.

Rashmika : ராஷ்மிகா பிறந்தநாளை முன்னிட்டு வெளியான 'புஷ்பா 2' படத்தின் ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தின் போஸ்டர்!

Content Queen என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் மணிமேகலை, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வித்தியாசமான கெட்டப்புகளில் ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். எப்படிப்பட்ட வேடம் அணிந்தாலும், அந்த கதாபாத்திரமாகவே மாறி தன்னுடைய ஸ்டைலில் நடிப்பையும் டயலாக்கையும் வெளிப்படுத்துவது இவரின் தனி சிறப்பு என கூறலாம்.

கேரியரில் இவர் செலுத்திய கவனம்... மிக குறுகிய நாட்களிலேயே 2 BMW கார் வாங்கும் நிலைக்கு இவரை கொன்டு வந்தது. மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இனி கோமாளியாக இருக்க மாட்டேன் என கூறி அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக கடந்த சீசனில் கூறிய மணிமேகலை, பின்னர் தொகுப்பாளினியாக ஃபைனலில் என்ட்ரி கொடுத்தார்.

Vijay Serial: முடிவுக்கு வரும் விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
 

அதே போல் விரைவில் துவங்க உள்ள குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியிலும், ரக்ஷனுடன் சேர்ந்து தொகுப்பாளராக களமிறங்க உள்ளார். சமீபத்தில் இதுகுறித்த... ப்ரோமோ ஒன்று வெளியாகி வைரலானது.

இந்நிலையில் மணிமேகலை.. மணிமேகலை கொரோனா லாக் டவுன் சமயத்தில் திருச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் சிக்கி கொண்ட நிலையில், அந்த மக்கள் கொடுத்த ஆதரவில் தான் வசித்து வந்தார். பின்னர் அங்கு யூடியூப் ஒன்றையும் துவங்கி அந்த ஊரில் எடுக்கும் பல வீடியோக்களை பதிவிட்டார். 

Meera Jasmine Father Death: நடிகை மீரா ஜாஸ்மினை கதறி அழ வைத்த மரணம்! ஆறுதல் கூறும் ரசிகர்கள்!

அந்த ஊர் மிகவும் பிடித்து விட்டதால், அங்கே நிலம் ஒன்றை வாங்கு... வீடு கட்டி வந்த நிலையில், தற்போது வீட்டின் பணிகள் அனைத்தும் முடிவடைந்து மிகவும் எளிமையான முறையில் கிரஹப்பிரவேசம் செய்துள்ளார். இதுகுறித்த சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்களின் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

click me!