பச்சை நிற பளீச் உடையில்... லைட்டாக இடையை காட்டி ரசிகர்களை மயக்கும் திவ்யா துரைசாமி! கார்ஜியஸ் கிளிக்ஸ் இதோ

First Published Jun 13, 2024, 11:12 AM IST

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு கலக்கி வரும் நடிகை திவ்யா துரைசாமியின் கலக்கல் போட்டோஷூட் புகைப்படங்களை பார்க்கலாம்.

dhivya duraisamy

செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின்னர் கொரோனா காலகட்டத்தில் வித விதமாக போட்டோஷூட் நடத்தி அதன் மூலம் இன்ஸ்டாவில் பேமஸ் ஆனவர் தான் திவ்யா துரைசாமி. இவர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆன எதற்கும் துணிந்தவன் படம் மூலம் கோலிவுட்டில் நடிகையாக எண்ட்ரி கொடுத்தார்.

Actress dhivya duraisamy

பின்னர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த குற்றம் குற்றமே திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான திவ்யா துரைசாமி, அப்படத்தில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். அப்படம் சரிவர வரவேற்பை பெறாததால், இன்ஸ்டாவில் சற்று கவர்ச்சி தூக்கலாக போட்டோ பதிவிட்டு வாய்ப்பு தேட தொடங்கினார் திவ்யா.

இதையும் படியுங்கள்... Premgi : பெரியப்பாவிடம் ஆசிபெற்ற பிரேம்ஜி... புதுமண ஜோடியை புன்னகையுடன் வாழ்த்திய இளையராஜா - வைரலாகும் போட்டோ

CWC fame dhivya duraisamy

அதன் பலனாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் வாழை என்கிற திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்க சான்ஸ் கிடைத்துள்ளது. அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதில் கலையரசன் ஜோடியாக திவ்யா துரைசாமி நடித்திருக்கிறார்.

dhivya duraisamy Photos

தற்போது நடிகை திவ்யா துரைசாமி சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்துள்ளார். விஜய் டிவியில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள திவ்யா துரைசாமி, அதில் தன் சமையல் திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

dhivya duraisamy latest Photoshoot

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு விதவிதமான கவர்ச்சி ஆடைகளை அணிந்து வரும் திவ்யா துரைசாமி, தற்போது பச்சை நிற சட்டையை மடிச்சு கட்டி, இடுப்பழகு தெரிய வித விதமாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி இருக்கிறார். அந்த புகைப்படங்களுக்கு இன்ஸ்டாவில் லைக்குகள் குவிந்து வருகின்றன.

இதையும் படியுங்கள்... GV Prakash : இசை அசுரன் ஜிவி பிரகாஷ் இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா? வியக்க வைக்கும் GV-ன் Net Worth இதோ

Latest Videos

click me!