Chennai Crime: “ஒழுங்கா ஒரு வேலைக்கு போக தெரியாதா?” என்று கேட்ட உறவினர் குத்தி கொலை -வாலிபர் வெறிச்செயல்

Published : Jun 26, 2024, 10:53 AM IST
Chennai Crime: “ஒழுங்கா ஒரு வேலைக்கு போக தெரியாதா?” என்று கேட்ட உறவினர் குத்தி கொலை -வாலிபர் வெறிச்செயல்

சுருக்கம்

சென்னை கொருக்குப்பேட்டை அருகே வேலைக்கு போகச்சொல்லி அறிவுறுத்திய உறவினரை இளைஞர் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டை, பாரதி நகர் ஹவுசிங் போர்டு பகுதியில் வசிப்பவர் பழனி (வயது 52). மீன் பாடி வண்டி ஓட்டும் தொழில் செய்து வருகிறார். பழனியின் தங்கை சிவகாமியின் மகளான அனிதாவின் கணவர் பிரசாந்த் என்ற குள்ள பிரசாந்த் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்ததாகவும், குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. 

பாலாற்றின் குறுக்கே புதிய அணை.. விவசாயிகள் வாழ்வாதாரமே போயிடும்- அலறி அடித்து கோரிக்கை விடும் டிடிவி தினகரன்

இதனால் பழனி, பிரசாந்தை வேலைக்கு செல்ல வேண்டியது தானே என்று கண்டித்துள்ளார். இதனை மனதில் வைத்துக் கொண்டு மது போதையில் வந்த பிரசாந்த் காய்கறி வெட்டும் கத்தியை கொண்டு பழனி வீட்டுக்கு சென்று பழனியை கொடூரமாக தாக்கி காயப்படுத்தினார். இந்நிலையில் அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த பழனியை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

கூட இருந்தே ரவுடியை கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டு கொடுத்த நண்பன்! உடல் அடையாறு ஆற்றில் வீச்சு!

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் பழனி வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஆர்கே நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரசாந்தை தேடி வந்த போது வழக்கறிஞர் மூலம் காவல் நிலையத்தில் பிரசாந்த் சரண் அடைந்தார். மேலும் ஆர்கே நகர் காவல் நிலையத்தில் பிரசாந்த் மீது வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. பிரசாந்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
என் பொண்ண வாரி கொடுத்துட்டு இருக்கேன்! உனக்கு உல்லா*சம் கேக்குதா! டார்ச்சர் கொடுத்த திமுக வழக்கறிஞர் கொ*லை!