கூட இருந்தே ரவுடியை கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டு கொடுத்த நண்பன்! உடல் அடையாறு ஆற்றில் வீச்சு!

Published : Jun 26, 2024, 09:55 AM ISTUpdated : Jun 26, 2024, 10:21 AM IST
கூட இருந்தே ரவுடியை கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டு கொடுத்த நண்பன்! உடல் அடையாறு ஆற்றில் வீச்சு!

சுருக்கம்

சென்னை சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலம் கீழே உள்ள அடையாறு ஆற்றின் கரையோரம் வாலிபர் உடல் மிதந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு  தகவல் தெரிவித்தனர்.

சென்னையின் பிரபல ரவுடியை கொடூரமாக வெட்டி படுகொலை செய்து அடையாறு ஆற்றில் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை சைதாப்பேட்டை மறைமலை அடிகளார் பாலம் கீழே உள்ள அடையாறு ஆற்றின் கரையோரம் வாலிபர் உடல் மிதந்தது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு  தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த கோட்டூர்புரம் போலீசார் தீயணைப்புத்துறையினர் உதவியுடன் உடலை மீட்டனர். 

இதையும் படிங்க: உயிர் நண்பர்களே ஐடி ஊழியரின் உயிரை எடுத்த பயங்கரம்.. நடந்தது என்ன? சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

அப்போது அந்த வாலிபரின் கழுத்து, முகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்ததை அடுத்து இவரை கொடூரமாக வெட்டி கொலை செய்து உடலை அடையாறு ஆற்றில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து அவரை உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்டவர் யார் என்பது விசாரணை மேற்கொண்டு வந்தனர். 

இதையும் படிங்க: காட்டுப்பகுதியில் மருமகள் கல்லூரி மாணவனுடன் உல்லாசம்! நேரில் பார்த்த மாமியார்! அப்புறம் என்ன நடந்தது தெரியுமா?

விசாரணையில் கண்ணகி நகர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பைச் சேர்ந்த ஆகாஷ் என்ற கருப்பு ஆகாஷ் ( 27) என்பது தெரியவந்தது. இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதால் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்று இருக்கலாம் என சந்தேகித்தனர். இந்நிலையில் ரவுடியை கொடூரமாக கொலை செய்து அடையாற்றில் அவரது உடல் வீசப்பட்ட சம்பவத்தில் அவரது நண்பர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சரக்கு வாங்கி கொடுத்து நண்பனே கொலைக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

கடந்த ஆண்டு அருண் என்பவரின் நண்பனை வெட்டி கொலை செய்த வழக்கில் ஆகாஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு பின் ஜாமீனில் வெளி வந்துள்ளார்.  ஆகாஷை பலமுறை கொலை செய்ய முயன்றபோதும் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இதனால் ஆகாஷின் நண்பர்களின் உதவியை நாடியுள்ளார்.  இதனையடுத்து ஆகாஷிற்கு அதிக அளவு சரக்கை ஊற்றி கொடுத்து வெட்டி படுகொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசியது தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

என் பொண்ண வாரி கொடுத்துட்டு இருக்கேன்! உனக்கு உல்லா*சம் கேக்குதா! டார்ச்சர் கொடுத்த திமுக வழக்கறிஞர் கொ*லை!
ஒரே போன்கால்..! தேனி பேருந்து நிலையத்தில் குவிந்த போலீஸ்! கையும் களவுமாக சிக்கிய பிரசாத்! நடந்தது என்ன?