ஒன்னில்ல ரெண்டில்ல ஒட்டுமொத்தமாக 7 விருதுகள்... ஆஸ்கர் மேடையை அதிரவிட்ட கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர்

First Published Mar 11, 2024, 8:53 AM IST

இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளிவந்த ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்திற்கு ஆஸ்கர் விழாவில் 7 விருதுகள் கிடைத்துள்ளன.

oppenheimer bags 7 oscar awards

96-வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் இன்று நடைபெற்றது. இவ்விருது விழாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓப்பன்ஹெய்மரும் ஒன்று. அப்படம் மொத்தம் 13 பிரிவுகளில் நாமினேட் ஆகி இருந்தது. இதுவரை ஆஸ்கர் வரலாற்றில் டைட்டானிக் திரைப்படம் 11 விருதுகள் வாங்கியதே சாதனையாக கருதப்பட்டு வருகிறது.

christopher Nolan

13 பிரிவுகளில் நாமினேட் ஆனதால் ஓப்பன்ஹெய்மர் அந்த சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த சாதனையை முறியடிக்காவிட்டாலும், அப்படத்திற்கு 7 பிரிவுகளில் விருதுகள் கிடைத்துள்ளன. இந்த ஆண்டு நாமினேட் ஆன படங்களில் அதிக விருதுகளை வென்ற படமாக ஓப்பன் ஹெய்மர் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக புவர் திங்ஸ் திரைப்படம் நான்கு ஆஸ்கர் விருதுகளை வென்று அசத்தியது.

இதையும் படியுங்கள்... எட்டாக் கனியாக இருந்த ஆஸ்கர் விருது... முதன்முறையாக வென்று வரலாறு படைத்துள்ளார் கிறிஸ்டோபர் நோலன்

Oppenheimer won 7 oscar awards

இதில் சிறப்பம்சம் என்னவென்றால் ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்தில் நடித்த ராபர்ட் டவுனி ஜூனியர் முதன்முறையாக ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். சிறந்த துணை நடிகருக்கான விருது அவருக்கு கிடைத்தது. இதுவரை மூன்று முறை நாமினேட் ஆகி வெற்றி வாய்ப்பை நழுவவிட்ட அவர் இம்முறை அதனை தட்டிதூக்கி இருக்கிறார். அதேபோல் ஓப்பன் ஹெய்மர் படத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனுக்கும் ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது இதுவே முதன்முறை.

Oppenheimer

ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த படம் ஆகிய 7 பிரிவுகளின் கீழ் ஆஸ்கர் விருதுகளை அள்ளிச் சென்றுள்ளது. இந்த ஆண்டு அதிக விருதுகளை வென்றுள்ள ஓப்பன் ஹெய்மர் படத்தின் குழுவினருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... Oscar 2024 Full Winners List : 96வது ஆஸ்கர் விருது விழா... வெற்றியாளர்கள் யார்; யார்? முழு லிஸ்ட் இதோ

click me!