இந்த பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா?

First Published Feb 2, 2024, 4:03 PM IST

சில பழங்களை நாம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கூடுதல் பலன் கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க, பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்று நமக்கு சிறூ வயதில் இருந்தே அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால். சில பழங்களை நாம் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கூடுதல் பலன் கிடைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

water melon

தர்பூசணி :

தர்பூசணி நீர்சத்து மிக்க பழமாகும், இந்த பழத்தில் 92% நீர் இருக்கிறது. மேலும் தர்பூசணியில் லைகோபீன் அதிகமாக உள்ளது, இது உங்கள் இதயம் மற்றும் சருமத்தைப் பாதுகாக்க உதவும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும். திரவங்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகளால் நிரம்பியுள்ள தர்பூசணி, நீரிழப்பை தடுக்க உதவும் பழமாகும். காலையில் வெறும் வயிற்றில் நீங்கள் தர்பூசணி சாப்பிடுவதால் நாள் முழுவதும் நீரேற்றமாக இருக்க உதவுகிறது..

papaya

பப்பாளி :

குறைந்த கலோரிகள், அதிக நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ என பல ஊட்டச்சத்துகள் பப்பாளியில் நிறைந்துள்ளது. பப்பெய்ன் மற்றும் சைமோபபைன் போன்ற நொதிகள் பப்பாளியில் அதிகம் உள்ளது. இந்த நொதிகள் செரிமானம் மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கின்றன. உடல் எடையை குறைக்க உதவுவதுடன் உங்கள் செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. மேலும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. எனவே தாராளமாக நீங்கள் காலையில் பப்பாளியை சாப்பிடலாம்.

Tropical fruits

அன்னாசி பழம்

அன்னாசி பழத்தில் வைட்டமின் சி மற்றும் மாங்கனீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த ஊட்டச்சத்துக்கள் உடலில் நன்கு உறிஞ்சப்பட்டு, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் எலும்புகளை வலுப்படுத்த உதவுகின்றன. அன்னாசி உங்கள் உடலின் பாதுகாப்பு வழிமுறைகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், எலும்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.

ஆப்பிள்

பெக்டின் நிரம்பிய ஆப்பிள் செரிமான அமைப்பை மேம்படுத்துவதுடன், பசியையும் கட்டுப்படுத்துகிறது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்கள் மூளையின் செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன. தினமும் காலை சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியம் மேம்படும்.

கிவி

கிவி பழத்தில்வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் என்சைம்கள் நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், தோல் ஆரோக்கியம் மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது. இதில் ஆக்டினிடின் என்ற நொதியும் உள்ளது, இது செரிமானத்திற்கு உதவுகிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பளபளப்பான சருமம் வேண்டுமென்றால் நீங்கள் கிவியை உட்கொள்ளலாம்.

வாழைப்பழம்

வாழைப்பழங்கள் பொட்டாசியம் அதிகளவில் உள்ளது., இது எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்துவதற்கும் தசை செயல்பாட்டை ஆதரிக்கவும் அவசியம். இதில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் இயற்கை சர்க்கரைகள் உள்ளன. இதில் பொட்டாசியம் இதய ஆரோக்கத்திற்கு உதவுகிறது. 

pear

பேரிக்காய்

பேரிக்காயில் வைட்டமின் சி மற்றும் கே, பொட்டாசியம் மற்றும் தாமிரம் போன்றவை அதிகம் உள்ளன. மேலும், பேரிக்காய் நம் ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக சிறுநீரகங்கள், குடல் மற்றும் இதயத்திற்கு நன்மை பயக்கிறது. பேரிக்காய் செரிமானத்தை மேம்படுத்துடன் பசி உணர்வை கட்டுப்படுகிறது.

click me!