மதுரையில் சாலையில் கிடந்த செயின், மோதிரம்; டீ கடைக்காரரின் செயலை கண்டு வியந்துபோன அதிகாரிகள்

By Velmurugan s  |  First Published May 16, 2024, 11:42 AM IST

மதுரை சோழவந்தான் பகுதியில் சாலையில் கேட்பாரற்று கிடந்த 4.75 சவரன் தங்க நகையை மீட்ட டீக்கடைக்காரர் அதனை உரிமையாளரிடமே ஒப்படைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


மதுரை மாவட்டம், சோழவந்தான் பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர் எஸ் ஆர் சரவணன். இவர் சோழவந்தானில் மத்திய கூட்டுறவு வங்கி எதிரில் சொந்தமாக டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று மாலை தனது கடையில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டுச் செல்லும்போது சாலையில் நூல் கட்டிய நிலையில் நகை கவர் ஒன்று கிடந்துள்ளது. அதை எடுத்துப் பார்த்தவர் அப்போதுதான் வங்கியில் இருந்து நகையை திருப்பிச் சென்றபோது கீழே தவற விட்டு சென்றுள்ளனர் என தெரிந்து கொண்டார்.

Tap to resize

Latest Videos

undefined

உடனே எதிரில் இருந்த மத்திய கூட்டுறவு வங்கி மேலாளரிடம் காண்பித்துள்ளார். நகை கவரை பார்த்த வங்கி மேலாளர் இது தங்களது வங்கியின் கவர் இல்லை என்று தெரிவித்து அருகில் உள்ள வங்கியில் சென்று  விசாரிக்குமாறு கூறி அனுப்பி உள்ளார். உடனே அருகில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சென்று வங்கி மேலாளிடம்  காண்பித்து இருக்கிறார். உடனே கவரை பார்த்த வங்கி மேலாளர் இது தங்களது வங்கியின் கவர் என்றும், சிறிது நேரத்திற்கு முன்புதான் இந்த நகையை திருப்பிச் சென்றனர் என்றும் கூறியுள்ளார்.

அரியலூரில் கிறிஸ்தவர்கள், இந்துகள் சேர்ந்து கொண்டாடிய தேர்பவனி; மெழுகுவர்த்தி ஏந்தி ஆயிரக்கணக்கானோர் வழிபாடு

மேலும் அதில் இரண்டு மோதிரம், இரண்டு செயின் சேர்த்து 4.75 சவரன் உள்ளது தெரிந்தது. உடனடியாக வங்கி மேலாளர் தனது வங்கியில் உள்ள முகவரி மூலம் நகையை திருப்பிச் சென்ற பெண்ணிற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதற்குள் சோழவந்தான் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த சரவணன் நகை காணாமல் போனதாக யாராவது வந்தால் உடனடியாக தனக்கு தகவல் தெரிவிக்குமாறும் தன்னிடம் கீழே கிடந்த நகை ஒன்று கவருடன் உள்ளதாகவும் தெரிவித்து உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

பெண் காவலரிடம் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? திடீரென நீதிமன்றத்திற்குள் நுழைந்த பெண் காவலர் குற்றச்சாட்டு

அங்கு நகையை பறிகொடுத்த சோழவந்தான் முதலியார் கோட்டை தெருவை சேர்ந்த வசந்தி என்பவர் தனது 4.75 சவரன் நகை வங்கியில் இருந்து திருப்பி வீட்டிற்கு சென்றபோது கீழே தவற விட்டுள்ளதாகவும், இது குறித்து தகவல் கிடைத்தால் தனக்கு தெரிவிக்குமாறும் கூறி சென்றுள்ளது தெரிந்தது. அதனை அடுத்து அதிகாரிகள் நகையை தவறவிட்ட  பெண்ணை வரவழைத்து நகையை ஒப்படைத்தனர். கீழே கிடந்த நகையை எடுத்து நேர்மையுடன்  வங்கி அதிகாரி  மூலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்த முன்னாள் கவுன்சிலர் எஸ் ஆர் சரவணனை பொதுமக்கள் மற்றும் வங்கி  மேலாளர், காவலர்கள் பாராட்டினர்.

மேலும் நகையை ஒப்படைத்ததற்காக அன்பளிப்புகள் வழங்க முற்பட்டபோது அதனை நேர்மையுடன் மறுத்து நகையை பாதுகாப்புடன் வீட்டிற்கு கொண்டு செல்லுமாறு. பெண்ணிடம் கூறிச் சென்றார்.

click me!