Scooters : பட்ஜெட் ஸ்கூட்டர் முதல்.. ஆடம்பர பைக் வரை.. மே மாதத்தில் களமிறங்கும் வாகனகள் - ஸ்பெக் & விலை இதோ!

First Published May 2, 2024, 12:52 PM IST

Bikes & Scooters Launching in May : இந்த மே மாதம் பல நிறுவனங்கள் தங்கள் புதிய பைக் மற்றும் ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது. அவை குறித்து இந்த பதிவில் காணலாம்.

Bajaj Pulsar NS400

Bajaj 

பிரபல பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் NS400ஐ வரும் மே 3, 2024 அன்று அறிமுகப்படுத்த உள்ளது அந்த நிறுவனம். இந்த பைக் இன்றுவரை வெளியானதிலேயே மிகப்பெரிய பல்சர் பைக்காக இருக்கும். 400cc திறன் கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக்கான இதன் விலை சுமார் 2 லட்சம் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் பலர் மத்தியில் பெரும் பிரபலமடைந்த ஒரு பைக் ஆகும்.

அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய க்ரீவ்ஸ் எலெக்ட்ரிக் மொபிலிட்டி.. சிறப்பு அம்சங்கள் என்ன?

2024 Husqvarna Svartpilen 250

Husqvarna

இந்த மே மாதம் வெளியிடப்படும் என்று பலரும் எதிர்பார்க்கும் மற்றொரு ஸ்ட்ரீட் பியிட்டர் பைக் தான், 2024 Husqvarna Svartpilen 250. Husqvarna சமீபத்தில் Svartpilen 401 மற்றும் Vitpilen 250ஐ அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 249cc என்ஜின் திறன் கொண்ட இந்த வண்டி சுமார் 2.3 லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Bajaj Chetak EV

Bajaj Chetak 

இந்திய சந்தையில் 80களின் துவக்கத்தில் அசத்திய பைக் தான் பஜாஜ் Chetak, இன்னும் அதே கிளாசிக் வண்டியை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த மே மாதம் பஜாஜ் நிறுவனம் தனது பஜாஜ் சேடக்கின் எலக்ட்ரிக் வேறுபாட்டை இந்திய சந்தைக்கு கொண்டுவருகிறது. பல்வேறு வண்ண விருப்பங்களில் கிடைக்கும் இந்த பைக்கின் விலை 1.14 லட்சத்தில் இருந்து துவங்குகிறது.

Hero Xoom

Hero Xoom 

இந்திய சந்தையில் இந்த மே மாதம் ஹீரோ நிறுவனம் இரு புதிய ஸ்கூட்டர்களை வெளியிடுகிறது. அவை Hero Xoom 125 மற்றும் Hero Xoom 160 ஆகியவை ஆகும். Xoom 125R ஆனது 124.6cc, ஏர்-கூல்டு இன்ஜினை பெற்றிருக்கும். இது 7,500rpm இல் 9.4bhp மற்றும் 6,000rpm இல் 10.16Nm ஐ வெளிப்படுத்தும்.இந்த இரு பைக்குகளும் 85,000 முதல் 1.45 லட்சம் என்ற விலைக்குள் விற்பனைக்கு வரும்.

Okaya Ferrato Disruptor

Okaya 

ஒகாயா நிறுவனம் தனது பிரீமியம் எலக்ட்ரிக் பைக் பிரிவில் நுழைவதில் பணியாற்றி வருகிகிறது. இதற்காக அவர்கள் ஃபெராடோ என்ற புதிய பிராண்டை உருவாக்கியுள்ளனர். அவர்களின் முதல் மின்சார பைக் ஒகாயா ஃபெராட்டோ டிஸ்ரப்டர் என்பதாகும். அது இநித்யாவில் இந்த மாதம் அறிமுகப்படுத்தப்படும். பிராண்டின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் இதற்கான முன் பதிவுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன் விலை 1.80 லட்சம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Aijith Kumar : கோலிவுட் உலகின் Self Made ஹீரோ.. AKயின் வியக்க வைக்கும் டாப் 10 கார் மற்றும் பைக் கலெக்ஷன்!

click me!