அடுத்தடுத்து தோல்வியை தழுவிய படங்கள்...சுமார் 2000 கோடிகளை இழந்த தயாரிப்பாளர்கள்

First Published Oct 8, 2022, 1:54 PM IST

கடந்த பல மதங்களாகவே பாலிவுட்டில்  நிலைமை மிக மோசமாகவே இருக்கிறது. அடுத்தடுத்து வெளியான பிரமாண்ட  படங்கள் எதுவும் கை கொடுக்காத நிலையில் முன்னணி நாயகர்களில் படம் கூட தோல்வியை தான் சந்தித்து வருகிறது. கடந்த 273 நாட்களில் வெளியான படங்கள் பலவும் தோல்வி அடைந்ததால் தயாரிப்பாளர்களுக்கு கிட்டத்தட்ட ரூ.2000கோடி நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த விக்ரம் வேதாவின் ரீமேக் ஹிந்தியில் உருவானது. 175 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தில் ரித்திக் ரோஷன், சைஃப் அலிகான் இருவரும் விஜய் சேதுபதி மற்றும் மாதவன் ரோலில் நடித்திருந்தனர். படம் வெளியாகி 7 நாட்களில் ரூபாய் 58 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இதனை வைத்து பார்க்கையில் 100 கோடியை படம் தாண்டுவதே கடினம் என தெரிவதால் , தயாரிப்பாளர்களுக்கு 117 கோடி நஷ்டம் ஏற்படும் என கூறப்படுகிறது.

180 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட பச்சன் பாண்டே படம் மார்ச் மாதம் வெளியானது. அக்ஷய் குமார் மற்றும் கிருத்தி சனோன் முக்கிய வேடங்களில் நடித்திருந்த இந்த படம் 73 கோடி மட்டுமே நுழைவுச்சீட்டு வாயிலாக பெற்றிருந்தது. மற்றபடி 72 கோடி தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு...அஜித்தின் துணிவு படத்தில் இணைந்துள்ள பிக்பாஸ் பாவனி - அமீர்...தீயாய் பரவும் டீம் போட்டோஸ் இதோ

ஜான் ஆபிரகாம் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடிப்பில் ஏப்ரல் மாதம் வெளிவந்த அட்டாக் 1 திரைப்படம் 80 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஆனால் இது பாக்ஸ் ஆபிஸில் வெறும் 22 கோடிகளை மட்டுமே வசூல் செய்து 58 கோடி நஷ்டத்தில் தோல்வி படமாக அமைந்தது

ஷாஹித் கபூர் மற்றும் மிருணால் தாக்கூர் நடித்த ஜெர்சி ஏப்ரலில் வெளியாகி இருந்தது. பலமுறை ஒத்திவைக்கப்பட்டு வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் தோல்வியை சந்தித்தது. 80 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இது  27 கோடிகளை மட்டுமே வசூலித்து சுமார் 53 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியது..

மேலும் செய்திகளுக்கு...மல்டிஸ்டார் காஃபி வித் காதல்... வெளியானது சூப்பர் அப்டேட்

அஜய் தேவ்கன், அமிதாப்பச்சன் மற்றும் ராகுல் பிரீத் சிங் நடித்த ரன் வே 34 படமும் தோல்வியை சந்தித்தது. ஏப்ரல் மாதம் வெளியான இது 55 கோடியில் தயாராகி, 33 கோடிகளுக்கு மட்டுமே வியாபாரமாகி, 22 கோடி நஷ்டத்தை சந்தித்தது.

அமீர்கான் மற்றும் கரீனா கபூர் நடித்த லால் சிங் சாத்தா திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. ஆகஸ்ட் மாதம் வெளியான படம் 180 கோடியில் தயாரிக்கப்பட்டது. 57 கோடி மட்டுமே வசூல் செய்து 123 கோடிகளை நஷ்டமாக பெற்றது.

ஆகஸ்டில் வெளியான அக்ஷய்குமாரின் மற்றொரு படமான ரக்ஷா பந்தனும் தோல்வி அடைந்தது. 70 கோடி பட்ஜெட்டில் உருவான படம் 59 கோடி வியாபாரம் செய்தது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு 11 கோடி நஷ்டம் ஏற்பட்டது.

லிகர் படமும் தோல்வியடைந்தது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் பிரமோஷன் விழாக்கள் பெற்ற வரவேற்பை கூட படம் பெறவில்லை. 175 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 18 கோடி மட்டுமே வசூலித்தது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு 157 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது

கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான தகட் படமும் மோசமான தோல்வியை சந்தித்தது. 85 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக எடுக்கப்பட்ட இந்த படம் நான்கு கோடிகளை மட்டுமே வசூலித்தது. இதனால் தயாரிப்பாளர்களுக்கு 80 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

ஜூன் மாதம் வெளிவந்த அக்ஷய் குமார், சஞ்சய் தத் மற்றும் மனுஷி சில்லரின் சாம்ராட் பிருத்திவிராஜ் மிகப் பெரிய எதிர்பார்ப்பு கிடையில் வெளியாகி இருந்தது. ஆனால் 300 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 90 கோடிகளை மட்டுமே வசூல் செய்திருந்தது. இதனால் 21 கோடிகளை தயாரிப்பாளர் நஷ்டமாக சந்தித்தார்.

ரன்வீர் கபூர், சஞ்சய்தத் நடிப்பில் வெளிவந்த சாம்ஷேரா  பாக்ஸ் ஆபிஸில் மோசமான தோல்வியை சந்தித்தது. 150 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் 64 கோடிகளுக்கு மட்டுமே வியாபாரமாகி 86 கோடி நஷ்டத்தை சந்தித்தது.

ஜூலை மாதம் வெளியான மற்றொரு படமான ஏக் வில்லன் ரிட்டன்ஸ் திரைப்படமும் தோல்வியடைந்தது அர்ஜுன் கபூர், திஷா பதானி, தாரா சுதாரியா மற்றும் ஜான் ஆபிரகாம் நடித்துள்ள இந்த படம் 80 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு 63 கோடி மட்டுமே வசூலாக பெற்று,  17 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியது.

ஜூலை மாதம் வெளியான மற்றொரு படமான ஏக் வில்லன் ரிட்டன்ஸ் திரைப்படமும் தோல்வியடைந்தது அர்ஜுன் கபூர், திஷா பதானி, தாரா சுதாரியா மற்றும் ஜான் ஆபிரகாம் நடித்துள்ள இந்த படம் 80 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு, 63 கோடி மட்டுமே வசூலாக பெற்று, 17 கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியது.

click me!