Parenting Tips : பிறந்த குழந்தையின் கண்களில் மை வைப்பது நல்லதா..? உண்மையும் கட்டுக்கதைகளும் இதோ!

Published : May 01, 2024, 04:52 PM ISTUpdated : May 01, 2024, 07:52 PM IST
Parenting Tips : பிறந்த குழந்தையின் கண்களில் மை வைப்பது நல்லதா..?  உண்மையும் கட்டுக்கதைகளும் இதோ!

சுருக்கம்

புதிதாகப் பிறந்த குழந்தையின் கண்களில் கண் மை பூசினால் தீய கண்களை ஏற்படுத்தாது என்று நம்பப்படுகிறது. ஆனால், மருத்துவ துறை அது முற்றிலும் தவறு என்று சொல்லுகிறது.

இந்தியாவில் பெரும்பாலான குடும்பங்களில், புதிதாகப் பிறந்த குழந்தையை தீய கண்ணிலிருந்து பாதுகாக்க கண் மை போடப்படுகிறது. ஆனால், குழந்தைகளின் மென்மையான கண்களில் கண் மை தடவுவது சரியா.. தவறா.. என்ற விவாதம் எப்போதும் மக்கள் மத்தியில் இருந்து வருகிறது.  இதை மருத்துவர்கள் பரிந்துரைக்கவில்லை என்றாலும், நம்பிக்கைகள் என்ற பெயரில், பல வீடுகளில், தாய்மார்கள் இன்னும் குழந்தைகளின் மென்மையான கண்களில் கண் மை பயன்படுத்துகிறார்கள். கண் மை, குழந்தையின் கண்பார்வை பாதிக்கப்படாது மற்றும் கண்கள் பெரிதாகும் என்பது இதன் பின்னணியில் உள்ள நம்பிக்கை. 

ஆனால், குழந்தைகளின் கண்களில் கண் மை தடவுவது குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள், விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே, இந்த கட்டுரையில் புதிதாக பிறந்த குழந்தை இன் கண்களில் கண்மை பூசுவதால் ஏற்படும் தீமைகள் என்னவென்று தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

குழந்தையின் கண்களில் கண்மை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்:
கண் மை குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு விஷம் போலவும் செயல்படும் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதாவது, தற்போது ரசாயனங்கள் அடங்கிய கண் மை தான் சந்தையில் கிடைக்கிறது. புதிதாக பிறந்த குழந்தையின் கண்களில் இதை பயன்படுத்துவது அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனில், சிறு குழந்தைகளின் கண்கள் மிகவும் மென்மையானது. அத்தகைய சூழ்நிலையில், எந்த ஒரு ரசாயன பொருள் உபயோகிப்பது குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும். 

இதனால் தான் கண்மை குழந்தைகளுக்கு பாதுகாப்பானது அல்ல என்கின்றனர் நிபுணர்கள். ஏனெனில், கண்மையில் அதிக அளவு ஈயம் உள்ளது. இது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். மேலும் குறிப்பாக, இது கண்கள் வழியாக சென்று மூளை சிறுநீரகங்கள், எலும்பு மஜ்ஜை மற்றும் உடலின் பிற உறுப்புகளையும் மோசமாக பாதிக்கிறது. இரத்தத்தில் ஈயத்தின் அளவு அதிகரித்தால், அந்த நபர் கோமா நிலைக்குச் சென்று இறக்கக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், இந்த தீங்கு விளைவிக்கும் ஈயம் வேகமாக வளரும் குழந்தையின் உடலுடன் தொடர்பு கொண்டால், அது நிச்சயமாக குழந்தைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

இதையும் படிங்க: Parenting Tips : குழந்தைக்கு நீச்சல் சொல்லி கொடுக்கீங்களா..? அப்ப 'இந்த' விஷயங்களை முதல்ல தெரிஞ்சுக்கோங்க!

இந்தப் பிரச்சனைகள் ஏற்படலாம்:
பிறந்த குழந்தைகளுக்கு கண்களில் கண்மை தீட்டுவதால் கண் தொற்று, கண் சிவத்தல், கண்களில் தொடர்ந்து நீர் வடிதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதே சமயம் இதன் காரணமாக சருமத்தில் தொற்று ஏற்படும் அபாயம் அதிகரிக்கும். மேலும் சொறி மற்றும் எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க:  Parenting Tips : பெற்றோரின் விவாகரத்து குழந்தையை எந்த மாதிரி பாதிக்கும் தெரியுமா..?

எந்த வகையான கண்மையும் பாதுகாப்பானது அல்ல:
சில வீடுகளில், வீட்டில் தயாரிக்கப்பட்ட கண்மைய குழந்தைகளுக்குப் பயன்படுத்தப்படுகிறார்கள். மேலும் அது இயற்கையானது என்று சொல்லுகிறார்கள்.  ஆனால் வீட்டில் தயாரிக்கப்பட்ட கண் மை கூட பாதுகாப்பானது அல்ல. காரணம், இதில் உள்ள கார்பன் குழந்தைகளின் கண்களுக்கு தீங்கு விளைவிக்கும். அதே நேரத்தில், கண்மைய  குழந்தையின் கண்களில் விரலால் தடவுவதால், அவர்களின் கண்களில் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

உண்மையில், குழந்தையின் தோல் மிகவும் உணர்திறன் கொண்டது. சிறிய கவனக்குறைவு கூட பெரிய தொற்றுநோயை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஒரு விரலின் உதவியுடன் குழந்தையின் கண்களில் கண் மை பயன்படுத்தினால், தொற்றுநோய்க்கான ஆபத்து அதிகரிக்கும். சில நேரங்களில் காஜலை விரலால் தடவும்போது கண்களில் காயம் ஏற்பட்டு, குழந்தையின் கண் பார்வை பாதிக்கப்படலாம்.

கண் மை தொடர்பான கட்டுக்கதை மற்றும் உண்மைகள்:

  • குழந்தையின் கண்களில் தினமும் கண் மை தடவினால் கண்கள் மற்றும் கண் இமைகள் பெரிதாக வளரும் என்று நம்பப்படுகிறது. இது முற்றிலும் பகுத்தறிவற்றது.
  • அதுமட்டுமின்றி, கண் மை பயன்படுத்துவதன் மூலம் குழந்தைகள் அதிக நேரம் தூங்குகிறார்கள் என்று சொல்லுகிறார்கள். இருப்பினும் இதுகுறித்த ஆராய்ச்சி எதுவும் இதுவரை வெளிவரவில்லை. சொல்ல் போனால், இது பயன்படுத்தாமல் கூட குழந்தைகள் தினமும் 18 முதல் 19 மணி நேரம் தூங்குகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

Read more Articles on
click me!

Recommended Stories

Winter Tips : குளிர்காலத்தில் சளி அடிக்கடி வருதா? இந்த உணவுகளை உடனே ஒதுக்கிவிடுங்க
Thyroid Belly : தைராய்டால் வந்த அதிக எடை, 'தொப்பை' அற்புத மூலிகை பானம்! எப்படி தயார் செய்யனும்?