அமுல்பேபி போல் இருந்த ஷிவானியா இது? படு ஒல்லியாகி ஆளே அடையாளம் தெரியாத அளவு மாறிட்டாங்களே..! போட்டோஸ் இதோ

First Published Mar 19, 2024, 11:12 AM IST

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை ஷிவானி நாராயணனின் ஸ்லிம் லுக் போட்டோஸ் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் ஷிவானி. ஸ்கூல் படிக்கும்போதே சீரியலில் நடித்து வந்த இவர், ஆரம்பத்தில் செம்ம குண்டாக இருந்தார். இப்படி இருந்தால் சீரியலில் அடுத்தகட்டத்திற்கு செல்ல முடியாது என்பதை உணர்ந்த ஷிவானி, கடுமையாக உடற்பயிற்சி செய்து உடல் எடையை கணிசமாக குறைத்தார்.

அவர் உடல் எடையை குறைத்ததன் பலனாக, அதுவரை பகல் நிலவு சீரியலில் சின்ன ரோலில் நடித்து வந்த ஷிவானியை ஹீரோயின் ஆக்கினர். அதில் அசீமுக்கு ஜோடியாக நடித்தார் ஷிவானி. பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கடைக்குட்டி சிங்கம் சீரியலில் நடித்த இவருக்கு ஒருகட்டத்தில் சினிமா ஆசை வந்துவிட்டது.

இதனால் சினிமா வாய்ப்பை தட்டிதூக்குவதற்காக பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் போட்டியாளராக களமிறங்கினார் ஷிவானி. அந்த சீசனில் கிட்டத்தட்ட இறுதிப்போட்டி வரை முன்னேறினார். அந்நிகழ்ச்சியின் கலந்துகொண்டதன் பலனாக ஷிவானிக்கு படிப்படியாக சினிமா வாய்ப்புகள் கிடைக்க தொடங்கின.

இதையும் படியுங்கள்... உயிர் முக்கியம் பிகிலு... ரோட்ட பார்த்து ஓட்டு - பைக்கில் துரத்தி வந்த ரசிகர்களுக்கு அன்புக் கட்டளையிட்ட விஜய்

அதன்படி அவர் நடித்த முதல் படமான விக்ரம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்திருந்தார் ஷிவானி. இதையடுத்து கடந்தாண்டு வெளிவந்த பம்பர் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். சினிமாவில் ஹீரோயினான பின்னரும் இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது அவர் பதிவிட்டுள்ள கவர்ச்சி புகைப்படங்கள் பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். இதற்கு முன்னர் வரை அமுல் பேபி போல் இருந்து வந்த ஷிவானி, தற்போது உடல் எடையை குறைத்து மிகவும் ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார். ஷிவானியின் ஒல்லி பெல்லி லுக் போட்டோஸ் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... Iswarya Menon : பஞ்சுமிட்டாய் கலர் சேலையில் பார்பி டால் போல் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா மேனன்! அடிபொலி போட்டோஸ் இதோ

click me!