Rachitha Birthday : ஒயின் குடித்தபடி பிறந்தநாளை கொண்டாடிய பிக்பாஸ் ரச்சிதா... வைரலாகும் பர்த்டே போட்டோஸ்

First Published Apr 24, 2024, 1:10 PM IST

பிக்பாஸ் பிரபலம் ரச்சிதா மகாலட்சுமி இன்று தனது 33-வது பிறந்தநாளை தன்னுடைய புது வீட்டில் தனது தாயாருடன் கொண்டாடி இருக்கிறார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் தொடர் மூலம் அறிமுகமானவர் ரச்சிதா மகாலட்சுமி. பின்னர் சரவணன் மீனாட்சி தொடரின் இரண்டாம் பாகத்தில் நடிகர் ரியோவுக்கு ஜோடியாக மீனாட்சி என்கிற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார் ரச்சிதா.

பின்னர் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்த ரச்சிதா, அந்த தொடர் முடிந்ததும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் ரச்சிதா போட்டியாளராக கலந்துகொண்டபோது அதில் ராபர்ட் மாஸ்டர் அவரை காதலித்தது பேசு பொருள் ஆனது. 

ஏனெனில் ரச்சிதாவுக்கு ஏற்கனவே சீரியல் நடிகர் தினேஷ் உடன் திருமணமாகி இருவரும் மனக்கசப்பின் காரணமாக விவாகரத்து செய்யாமலேயே பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சீரியல்களுக்கு குட் பை சொல்லிவிட்ட ரச்சிதா சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார்.

இதையும் படியுங்கள்... பேன்ட் போட மறந்துடீங்களா? 'ஃபயர்' படத்தில் கவர்ச்சியில் வெறியேற்றும் ரச்சித்தா மகாலட்சுமி! வெளியானது கிலிம்ஸி!

தமிழில் நடிகை ரச்சிதா நடிப்பில் தற்போது ஃபயர் என்கிற திரைப்படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் பாலாஜி முருகதாஸ் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் சாக்‌ஷி அகர்வால், சாந்தினி, சுரேஷ் சக்ரவர்த்தி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தை ஜே.எஸ்.கே இயக்கி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

இந்த நிலையில், நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் பிறந்தநாளான இன்று அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஃபயர் படத்தில் இருந்து படு கவர்ச்சியான கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டு உள்ளது. சில்க் ஸ்மிதா ரேஞ்சுக்கு நடிகை ரச்சிதா கவர்ச்சியாக நடித்துள்ளதை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர். 

இது ஒருபுறம் இருக்க நடிகை ரச்சிதா தன்னுடைய பிறந்தநாளை தன்னுடைய வீட்டில் தனது தாயாருடன் கொண்டாடி இருக்கிறார். அதுமட்டுமின்றி தன்னுடைய புதுவீட்டில் தான் கொண்டாடும் முதல் பிறந்தநாள் இது என்றும், பிறந்தநாளன்று ஒயின் குடித்தபடி போஸ் கொடுத்தும் போட்டோவை வெளியிட்டுள்ள ரச்சிதா, 33 வயதாகியும் தன்னுடைய இளமையின் ரகசியம் ஒயின் என கூறி இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... என்னது ‘ரெட்ட தல’ அஜித் டிராப் பண்ண படமா? 10 ஆண்டு காத்திருந்து கைவிட்ட இயக்குனர் - அருண் விஜய் சொன்ன சீக்ரெட்

click me!