போலந்து நாட்டில் நடைபெற்ற கிராண்ட் செஸ் டூர் தொடரில் செஸ் உலகக் கோப்பை சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை தமிழக வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
போலந்து நாட்டில் கடந்த 8 ஆம் தேதி சூப்பர் பெட் ராபிட் மற்றும் பிலிட்ஸ் போலந்து செஸ் தொடர் தொடங்கியது. இந்த தொடர் இன்றுடன் முடிவடைகிறது. இதில், செஸ் உலகக் கோப்பை சாம்பியனான மேகன்ஸ் கார்ல்சனை வீழ்த்தி தமிழகத்தில் பிரக்ஞானந்தா சாதனை படைத்தார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற செஸ் உலகக் கோப்பையில் கார்ல்சனிடம் தோல்வி அடைந்த பிரக்ஞானந்தா இன்று அவரை வீழ்த்தி சாதித்திருக்கிறார். தற்போது போலந்து நாட்டில் 9ஆவது கிராண்ட் செஸ் டூர் தொடரின் முதல் சீசன் நடைபெற்று வருகிறது. கடந்த 8ஆம் தேதி தொடங்கிய இந்த தொடரில் டி குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜூ ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் செஸ் உலக கோப்பை சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் பங்கேற்றார்.
Praggnanandhaa's autograph marathon in Poland🖋️✨! pic.twitter.com/JhWVIlewzP
— Grand Chess Tour (@GrandChessTour)
நேற்று நடைபெற்ற போட்டியில் கார்ல்சனை வீழ்த்தி பிரக்ஞானந்தா சாதனை படைத்தார். இந்த போட்டியில் தோல்வி அடைந்த கார்ல்சன் 18 புள்ளிகள் குறைந்து தரவரிசைப் பட்டியலில் 2ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா 14.5 புள்ளிகளுடன் 3ஆவது இடம் பெற்றார். இவரைத் தொடர்ந்து இந்திய வீரர் அர்ஜூன் ஏர்காசி 14 புள்ளிகளுடன் 4ஆவது இடத்திலிருக்கிறார்.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு பேசிய கார்ல்சன் கூறியிருப்பதாவது: பிரக்ஞானந்தா உடன் விளையாடும் போது தனது நரம்பு மண்டலம் செயலற்று போனதாக உணர்ந்ததாக கூறியுள்ளார். இந்த தொடரில் வெற்றி பெறும் வீரருக்கு ஒரு கோடி 46 லட்சம் பரிசு தொகை வழங்கப்படும். இன்னும் 9 சுற்றுகள் இருக்கும் நிலையில், இதில் புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடத்திலிருக்கும் சீன வீரரான Wei yi சாம்பியனாவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
போலந்து நாட்டைத் தொடர்ந்து அடுத்ததாக ஜூன் 24 ஆம் தேதி முதல் ஜூலை 6 ஆம் தேதி வரையில் சூப்பர்பெட் ருமேனியா செஸ் கிளாசிக் தொடர் நடைபெறுகிறது. இதையடுத்து, ஜூலை 8 ஆம் தேதி முதல் ஜூலை 14 ஆம் தேதி வரையில் சூப்பர் யூனைடெட் குரோஷியா ரேபிட் மற்றும் பிலிட்ஸ் செஸ் தொடர் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரையில் சைண்ட் லூயிஸ் ரேபிட் மற்றும் பிலிட்ஸ் அமெரிக்காவில் நடைபெறுகிறது.
கடைசியாக ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையில் அமெரிக்காவில் 2024 சின்க்ஃபீல்ட் டிராபி தொடர் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியின் முடிவில் புள்ளிப்பட்டியலில் நம்பர் 1 இடம் பிடிக்கும் வீரர் தான் டிராபியை கைப்பற்றுவார்.
Praggnanandhaa's autograph marathon in Poland🖋️✨! pic.twitter.com/JhWVIlewzP
— Grand Chess Tour (@GrandChessTour)