குக் வித் கோமாளி சீசன் 5 TRP-யை எகிற வைக்க... 3 பிக்பாஸ் போட்டியாளர்களை களமிறக்கும் விஜய் டிவி..!

First Published Mar 25, 2024, 9:26 AM IST

விஜய் டிவியில் விரைவில் தொடங்க உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 5-வது சீசனில் புதிதாக 3 பிக்பாஸ் பிரபலங்கள் களமிறங்கி உள்ளார்களாம்.

cook with comali 5

விஜய் டிவியில் புகழ்பெற்ற ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான குக் வித் கோமாளி இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ளது. தற்போது அந்நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் அலப்பறையாக ஆரம்பமாக உள்ளது. வழக்கமாக இந்த நிகழ்ச்சியை வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோர் தான் தொகுத்து வழங்குவார்கள் ஆனால் இம்முறை வெங்கடேஷ் பட் விலகியதால் அவருக்கு பதில் யார் நடுவராக பங்கேற்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. 

Poornima Ravi

அதற்கு விடை கொடுக்கும் வகையில் அண்மையில் ஒரு மாஸ் புரோமோவை வெளியிட்டனர். அந்த புரோமோவின் மூலம் மாதம்பட்டி ரங்கராஜ் இந்த சீசனில் செஃப் தாமுவுடன் சேர்ந்து நடுவராக பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது. இதனால் இந்நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது. அதோடு இந்த சீசனில் யார் யார் போட்டியாளர்களாக களமிறக்கப்படுவார்கள் என்கிற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.

இதையும் படியுங்கள்... KPY Bala : சைக்கிள் கூட இல்லாம கஷ்டப்பட்ட பெட்ரோல் பங்க் ஊழியர்.. பைக் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்த பாலா

Dinesh

அந்த வகையில் கடந்த வாரம் லீக்கான முதல் லிஸ்ட்டின் படி, பிரபல யூடியூப்பரான முகமது இர்பான், நடிகரும் ஒளிப்பதிவாளருமான விடிவி கணேஷ், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, லேட்டஸ்ட் டிரெண்டிங் நாயகி திவ்யா துரைசாமி, ஆகியோரின் பெயர்கள் அடிபட்டன. இந்த நிலையில், தற்போது மேலும் மூன்று போட்டியாளர்கள் குறித்த விவரம் கசிந்துள்ளது. அவர்கள் மூவருமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர்கள் ஆவர்.

priyanka deshpande

அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் கலந்துகொண்ட தினேஷ் கோபால்சாமி மற்றும் பூர்ணிமா ரவி ஆகியோர் இந்த முறை குக் வித் கோமாளியில் கலந்துகொண்டு தங்கள் சமையல் திறமையை வெளிப்படுத்த உள்ளார்களாம். அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட விஜய் டிவியின் செல்லப்பிள்ளை பிரியங்கா தேஷ்பாண்டே இம்முறை குக் வித் கோமாளியில் தன் சமையல் திறமையை வெளிப்படுத்த களமிறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... Priyamani: ஜாக்கெட் அணியாமல் சேலை கட்டி.. பாரதிராஜா பட ஹீரோயின் லுக்கில் பிரியாமணி நடத்திய கிளாசிக் போட்டோஷூட்

click me!