Bharath: பரத் படப்பிடிப்பில் கல் எறிந்து திடீர் தாக்குதல்...ஷூட்டிங் பாதியிலேயே நிறுத்தம்...போலீசார் விசாரணை..

First Published May 14, 2022, 2:38 PM IST

Bharath shooting attack: நடிகர் பரத்  நடிப்பில் ஆக்ஷன் 22 படப்பிடிப்பின் போது, திடீரென அங்கு வசிக்கும் மக்கள் சிலர் வந்து கல் எரித்து தாக்குதல் நடத்தி ரகளை செய்து ஷூட்டிங்கை பாதியிலேயே நிறுத்தியுள்ளனர்.  

Bharath

தமிழ் சினிமாவில், கடந்த 2003-ம் ஆண்டு வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பரத். இதையடுத்து, செல்லமே படத்தில் ரீமா சென்னின் தம்பியாக நடித்திருந்தார். இவர் ஹீரோவாக பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2004-ம் ஆண்டு ரிலீசான காதல் படத்தின் மூலம்  அறிமுகமானார். இந்த பாத்தில் இவரது நடிப்பிற்கு பெரிய அளவில் பாராட்டுக்கள் கிடைக்கபெற்றது. 

Bharath

இதையடுத்து அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர, எம் மகன், வெயில், நேபாளி, பழனி, சேவல் உள்ளிட்ட வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். தமிழில் இதுவரை 49 படங்களில் நடித்துள்ளார்.

Bharath

இதையடுத்து, அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குறைய துவங்க தற்போது குணச்சித்திர வேடங்கள் தான் கிடைக்கிறது. தற்போது அவர் ஆக்ஷன் 22 என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் நடிக்க உள்ளார். விவேக் பிரசன்னா, டேனியல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.
 

Bharath

இந்த படத்தின் கதைக்களம்,  சில வருடங்களுக்கு தாய்லாந் குகையில் மாணவர்கள் சிலர் சிக்கிக்கொள்ள, அதன் பின் பல நாட்கள் மீட்பு பணிகள் நடந்த பிறகு தான் அவர்கள் காப்பாற்றப்பட்டனர். அந்த சம்பவத்தை வைத்து தான் ஆக்ஷன் 22 படத்தின் கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

bharath

இதன் உண்மை சம்பவம் நடந்த இடத்தில் படத்தின் ஷூட்டிங்கை, நடத்த முடிவெடுத்த படக்குழுவினர் அரசு அனுமதியை பெற்று அங்கு சென்று ஷூட்டிங் நடத்தி இருக்கின்றனர். அப்போது, திடீரென அங்கு வசிக்கும் மக்கள் சிலர் வந்து ரகளை செய்து ஷூட்டிங்கை நிறுத்தியுள்ளனர். பணம் கொடுத்தால் தான் ஷூட்டிங் நடத்த விடுவோம் என மிரட்டி இருக்கின்றனர். 
 

bharath

இதையடுத்து, பணம் கொடுத்த பிறகும் அவர்கள் கார்களை சேதப்படுத்தி கல் எறிந்து தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, படக்குழுவினர் இனி ஷூட்டிங் அங்கு நடத்தாமல் செட் போட்டு எடுத்துக்கொள்ளலாம் என  முடிவெடுத்து இருக்கிரார்களாம்.

 மேலும் படிக்க...திருமணத்திற்கு தேதி குறித்த ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ! ரகசியமாக நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்...கியூட் கிளிக்ஸ்

click me!