இந்த விஷயம் மட்டும் தெரிஞ்சா இனி நீங்களும் ஷாம்புவிற்கு பிறகு கண்டிஷனர் யூஸ் பண்ணுவீங்க!

First Published Feb 20, 2024, 7:05 PM IST

தலைக்கு ஷாம்பு பயன்படுத்திய பிறகு கண்டிஷனர் போடுவது ஏன் முக்கியம் தெரியுமா..? வாங்க தெரிஞ்சுக்கலாம்..

நம் தலைமுடி சுத்தமாகவும் நேர்த்தியாகவும் மட்டுமல்லாமல், மென்மையாகவும், பளபளப்பாகவும்,  இருக்க வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். இதற்கு நாமும் பல வகையான விலை உயர்ந்த கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துகிறோம். அதில் ஷாம்பு மற்றும் கண்டிஷனர் அடங்கும்.

ஆனால், ஷாம்பூவுக்குப் பிறகு ஏன் கண்டிஷனர் பயன்படுத்தப்படுகிறது என்பது பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. அதனால்தான் பல முறை தலைமுடிக்கு கண்டிஷனர் பயன்படுத்துவதை தவிர்க்கிறார்கள். ஷாம்புக்குப் பிறகு கண்டிஷனரைப் பயன்படுத்துவது அவசியமா? வாருங்கள், இந்தக் கேள்விக்கான பதிலை இங்கு தெரிந்துகொள்ளலாம்..
 

ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்பாடு என்ன?
ஷாம்பு முடி மற்றும் உச்சந்தலையில் உள்ள எண்ணெய் பசை, தூசி மற்றும் அழுக்குகளை அகற்றுகிறது. அதேசமயம் கண்டிஷனர் முடிக்கு ஈரப்பதத்தை அளித்து, மென்மையாக வைக்க உதவுகிறது.
 

கண்டிஷனர் ஏன் முக்கியம்?
ஷாம்பு முடியை சுத்தம் செய்தாலும், முடியில் உள்ள இயற்கையான எண்ணெயையும் நீக்குகிறது, இதன் காரணமாக முடி வறண்டு, உயிரற்ற மற்றும் மேட்டாக தோற்றமளிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், முடிக்கு கண்டிஷனர் தேவை. இது முடியை நீண்ட நேரம் நீரேற்றமாக வைத்திருக்கிறது, அவற்றின் ஸ்டைலிங்கை எளிதாக்குகிறது.

இதையும் படிங்க:  தலைக்கு ஷாம்பு போடுவதற்கு முன் கண்டிப்பா 'இத' செய்யுங்க...கூந்தல் பாதிக்காது!

கண்டிஷனர் எல்லா முடிக்கும் போடலாமா?
பொதுவாகவே, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான முடிகள் இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், கண்டிஷனரைப் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஒவ்வொருவருக்கும் அவர்களின் தலைமுடிக்கு ஏற்ப மாறுபடும். உதாரணமாக, உலர்ந்த மற்றும் உயிரற்ற முடி உள்ளவர்கள் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். அதேசமயம், எண்ணெய் பசையுள்ள கூந்தலாக இருந்தால், வாரத்திற்கு 1-2 முறை மட்டும் கண்டிஷனர் போட்டால் போதும். அதே சமயம், கண்டிஷனர் இல்லாமலும் சாதாரண தரமான முடி அழகாக இருக்கும். 

இதையும் படிங்க:  தலைக்கு குளிக்கும்போது இந்த தவறுகளை செய்யாதீர்கள்..!

இந்த விஷயத்தை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்:

உங்கள் முடி வகைக்கு ஏற்ப கண்டிஷனரை பயன்படுத்துவது நல்லது.

அதுபோல், கண்டிஷனரை முடியின் நுனியில் மட்டும் பயன்படுத்தவும். முடியில் வேர்களில் பயன்படுத்தக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

மேலும் கண்டிஷனரை முடியின் நுனியில் 2-3 நிமிடங்கள் வைத்திருந்த பிறகு நன்றாகக் கழுவவும். குளிர்ந்த நீரில் கழுவுவது முடியை பளபளப்பாக மாற்றும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!