தப்பி தவறிக் கூட பெட்ரூமை 'இந்த' திசையில் கட்டிடாதீங்க அவ்வளவுதானாம்..! பெஸ்ட் திசை எது தெரியுமா..?

First Published Mar 23, 2024, 10:30 AM IST

வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டின் பெட்ரூம் எந்த திசையில், எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதை குறித்து இங்கே பார்க்கலாம்.

பொதுவாகவே, நாம் வீடு கட்டும் போது வீட்டின் திசை மற்றும் வீட்டில் உள்ள மற்ற இடங்களின் திசையை வாஸ்து சாஸ்திரத்தின் படி தான் கட்டுவது வழக்கம். அப்படி கட்டினால் தான் வீட்டில் நல்லது நடக்கும் என்பது ஐதீகம்.

அந்த வகையில், வீட்டின் பெட்ரூமை வாஸ்து படி சரியான திசையில் கட்டினால் வீட்டில் செல்வம் செழிக்கும். அதுமட்டுமின்றி, நல்ல மற்றும் நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும். எனவே, வாஸ்து படி வீட்டின் பெட்ரூம் எந்த திசையில் இருக்க வேண்டும் என்பதை குறித்து இங்கே பார்க்கலாம்.

தென்மேற்கு திசை: வீட்டு கட்டும் போது வீட்டின் பெட்ரூம் தென்மேற்கு அல்லது தெற்கு அல்லது மேற்கு திசைகளில் தான் கட்ட வேண்டும். அப்படி அந்த திசைகளில் கட்டினால் மட்டுமே, மகிழ்ச்சி, நிம்மதி மற்றும் பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் வாஸ்து படி, பெட்ரூமில் இருக்கு படுக்கையானது மரத்தால் தான் இருக்க வேண்டும். அதுமட்டுமின்றி, செவ்வகம் அல்லது சதுர வடிவில் தான் படுக்கை இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். 

அதுபோல், தூங்கும் போது தலையை தெற்கு அல்லது கிழக்கு திசை நோக்கி தான் இருக்க வேண்டும். குறிப்பாக, பெட்ரூமில் படுக்கை வடக்கு திசை நோக்கி இருக்க கூடாது.  ஒருவேளை அப்படி இருந்தால் மன அழுத்தம் அதிகரிக்கும்.
 

இந்த திசைகளில் பெட்ரூம் இருக்க கூடாது: வட கிழக்கு திசையில் பெட்ரூம் ஒருபோதும் இருக்கவே கூடாது. அந்த திசையில் பூஜை அறை தான் இருக்க வேண்டும். அதுபோலவே, தென்கிழக்கு திசையிலும் பெட்ரூம் இருக்கவே கூடாது. அந்த திசை சமையலறைக்கான திசை என்பதால் பெட்ரூமை அந்த திசையில் கட்ட கூடாது. முக்கியமான, சமையல் அறையில் மற்றும் படுக்கையறை இரண்டும் பக்கம் பக்கம் இருக்கும் படி கட்ட கூடாது. அப்படி கட்டினால் வீட்டில் சண்டை சச்சரவுகள் அதிகரிக்கும். 

இதையும் படிங்க: உங்கள் பெட்ரூமில் ஒருபோதும் இந்த 5 பொருட்களை வைக்காதீங்க.. பல பிரச்சனைகள் ஏற்படுமாம்

பெட்ரூம் கதவுக்கான திசை: வீட்டின் பெட்ரூம் கதவு கிழக்கு மேற்கு அல்லது வடக்கு திசையை பார்த்து தான் இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள். அதுபோல், பெட்ரூமில் இருக்கும் ஜன்னலானது, கிழக்கு அல்லது வடக்கு திசை பார்த்து தான் இருக்க வேண்டும். 

இதையும் படிங்க: கணவன் மனைவி இடையே அன்பு குறையாமல் இருக்க பெட்ரூமில் 'இத' வையுங்கள்..!

முக்கியமாக, பெட்ரூமில் இருக்கும் படுக்கைக்கு முன்பு எப்போதும் கண்ணாடி இருக்க கூடாது. காரணம், அதனால் வீட்டில் தீங்கும் நடக்கும். மேலும், பெட்ரூம் சுவற்றின் நிறமானது நீலம், பச்சை, மஞ்சள் அல்லது வெள்ளை நிறங்களில் தான் இருக்க வேண்டும். இது பெட்ரூமுக்கு நேர்மறை ஆற்றலை அள்ளிக் கொடுக்கும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!