பிக்பாஸ் வீட்டில் என்ன ஆச்சு... இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என திடீரென அறிவித்த விஜய் டிவி - காரணம் இதுதான்

First Published Dec 6, 2023, 4:01 PM IST

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என விஜய் டிவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது ஏன் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

BiggBoss house

ரசிகர்களின் பேவரைட் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஆறு சீசன்கள் சக்சஸ்புல்லாக முடிவடைந்துள்ள நிலையில், 7-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் கோலாகலமாக தொடங்கியது. இதற்கு முந்தைய சீசன்களைப் போல் அல்லாமல் இந்த முறை இரண்டு வீடுகளுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக பிக்பாஸ், சுமால் பாஸ் என இரண்டு வீடுகள் இடம்பெற்று உள்ளன.

Bigg Boss Tamil season 7

ஆரம்பம் முதலே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வார வாரம் ஏதாவது ஒரு சர்ச்சைக்குரிய சம்பவங்கள் இந்த சீசனில் அரங்கேறிய வண்ணம் உ:ள்ளன. தற்போது வெற்றிகரமாக 60 நாட்களைக் கடந்து ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 13 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். இதில் இந்த வார எவிக்‌ஷனுக்காக சுமால் பாஸ் வீட்டில் இருந்து நிக்சனும், பிக்பாஸ் வீட்டில் இருந்து விசித்ரா, தினேஷ், அர்ச்சனா, மணி ஆகியோரும் நாமினேட் ஆகி இருந்தனர்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

Nixen

இத்தனை வாரங்களாக நாமினேஷனில் சிக்காமல் தப்பித்து வந்த நிக்சனை இந்த வாரம் எப்படியாவது எலிமினேட் செய்துவிட வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலோடு இருந்த நிலையில், அவரை தற்போது மிக்ஜாம் புயல் வந்து காப்பாற்றி உள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களை சேர்ந்த பிக்பாஸ் ரசிகர்களால் வாக்களிக்க முடியாமல் போனது. இதனால் இந்த வாரம் எலிமினேஷன் செய்ய வேண்டாம் என வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது,

No eviction

இதனை ஏற்ற பிக்பாஸ் டீம், இந்த வாரம் எலிமினேஷன் கிடையாது என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக ரசிகர்களால் வாக்களிக்க முடியாமல் போன காரணத்தினால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளனர். இதனால் இந்த வார நாமினேட் ஆன ஐந்து பேரும் எஸ்கேப் ஆகி உள்ளனர். இந்த வாரம் எலிமினேஷன் இல்லாததால் அடுத்த வாரம் டபுள் எவிக்‌ஷனும் இருக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... சினிமா மட்டுமல்ல ஓட்டல் பிசினஸிலும் கொட்டும் துட்டு... கோடிகளில் புரளும் காமெடி நாயகன் சூரியின் சொத்து மதிப்பு

click me!