எந்த வீரரும் செய்யாத செயலை செய்த ரொமாரியோ ஷெப்பர்டு – ரோகித் சர்மாவிடம் என்ன செய்தார் தெரியுமா?

First Published May 18, 2024, 12:20 PM IST

மும்பை இந்தியன்ஸ் வீரர் ரொமாரியோ ஷெப்பர்டு, ரோகித் சர்மாவிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Mumbai Indians vs Lucknow Super Giants, 67th Match

வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 67ஆவது லீக் போட்டி நேற்று நடைபெற்றது. இதில், ரோகித் சர்மா இம்பேக்ட் பிளேயராக இடம் பெற்றார். முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் குவித்தது.

Mumbai Indians vs Lucknow Super Giants, 67th Match

அப்போது ரோகித் சர்மா 2 முறை சப்ஸ்டிடியூட் வீரராக வந்து சென்றார். அவர் பீல்டிங் செய்த போது மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் ரோகித் ரோகித் என்று கோஷமிட்டனர். வரும் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்னதாக மெகா ஆக்‌ஷன் நடைபெற உள்ள நிலையில், ரோகித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி விடுவிக்கும் என்று தகவல் வெளியாகி வருகிறது.

Mumbai Indians vs Lucknow Super Giants, 67th Match

இதன் காரணமாக ரோகித் சர்மா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு செல்ல அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. எனினும், இது குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தான் இந்தப் போட்டியின் போது மும்பை இந்தியன்ஸ் வீரராக ரொமாரியோ ஷெப்பர்டு, டிரெஸிங் ரூமிலிருந்த ரோகித் சர்மாவிடம் சென்று ஆட்டோகிராஃப் வாங்கியுள்ளார்.

Mumbai Indians vs Lucknow Super Giants, 67th Match

இது தொடர்பான புகைப்பட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோகித் சர்மா நல்ல தொடக்கம் கொடுத்தார். அவர், 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தனது 150ஆவது ஐபிஎல் போட்டியில் விளையாடிய சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

Mumbai Indians vs Lucknow Super Giants, 67th Match

இஷான் கிஷான் 14, ஹர்திக் பாண்டியா 16 ரன்களில் ஆட்டமிழக்க, நமன் திர் மட்டும் கடைசி வரை அதிரடியாக விளையாடி 62 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். எனினும், மும்பை இந்தியன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்கள் குவித்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. மும்பை இந்தியன்ஸ் அணியானது இந்த சீசனை தோல்வியோடு ஆரம்பித்து தோல்வியோடு முடித்துள்ளது.

Latest Videos

click me!