இதுவரை இல்லாத அளவுக்கு கங்கை நீர் மட்டம் வீழ்ச்சி.. இதுதான் காரணமா?

By Ramya s  |  First Published Jun 25, 2024, 9:31 AM IST

உத்திரப் பிரதேச மாநிலத்தில் நிலவி வரும் கடும் வெப்பத்தால் கங்கை நதியின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவு குறைந்துள்ளது.


நாட்டில் உள்ள புனித நதிகளில் ஒன்றாக கருதப்படுவது கங்கை நதி. வாரணாசியில் ஓடும் இந்த கங்கை நதியில் நீராடினால் பாவங்கள் போகும் என்பது ஐதீகம். இதனால் நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான பக்தர்கள் வாரணாசி செல்கின்றனர். இதனால் கங்கை நதிக்கரையில் எப்போதுமே கூட்டம் அலைமோதி வருகிறது. 

இந்த நிலையில் உத்திரப் பிரதேச மாநிலத்தில் நிலவி வரும் கடும் வெப்பத்தால் கங்கை நதியின் நீர்மட்டம் வரலாறு காணாத அளவு குறைந்துள்ளது. பொதுவாக ஜூன் மாதத்தில் 70 முதல் 80 மீட்டர் வரை இருக்கும் ஆற்றின் அகலம், தற்போது வெறும் 30 – 35 மீட்டராக குறைந்துவிட்டது. நீர்மட்டம் குறைந்து வருவதால் கரையோரத்தில் இருக்கும் உடைந்த படகுகள், குப்பைகள், பாறைகள் ஆகியவை வெளியே தெரிகின்றன.

Tap to resize

Latest Videos

Ayodhya : கனமழை.. அயோத்தி ராமர் கோவிலில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்? - கோவில் கட்டுமான குழு தலைவர் விளக்கம்!

இதற்கிடையில், தேசிய தலைநகர் டெல்லி கடந்த வாரம் முதல் தண்ணீர் நெருக்கடியை சந்தித்து வருகிறது. டெல்லியில் வசிக்கும் மக்கள் தங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய கூட மிகவும் சிரமப்படுகிறார்கள். பலரும் தண்ணீர் தேவைக்காக தண்ணீர் டேங்கர்களை பெரிதும் நம்பியுள்ளனர்.

தண்ணீர் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் யமுனையில் கூடுதல் தண்ணீரை வெளியேற்றுமாறு ஹரியானாவிடம் டெல்லி அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமான அதிஷி சனிக்கிழமை தெரிவித்தார்.

சாட்டிலைட் புகைப்படத்தில் ராமர் பாலம்! ஐரோப்பிய ஏஜென்ஜி வெளியிட்ட ஹெச்.டி. போட்டோ வைரல்!

தேசிய தலைநகரில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய டெல்லியின் நீர் அமைச்சர், முனாக் கால்வாய் மற்றும் வஜிராபாத் நீர்த்தேக்கத்தில் நீர் இல்லாததால் தலைநகர் ஒரு நாளைக்கு 70 மில்லியன் கேலன்கள் (எம்ஜிடி) உற்பத்தியில் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. எனவே மனிதாபிமான அடிப்படையில் நகர மக்களுக்கு கூடுதல் தண்ணீரை விடுவிக்க டெல்லி அரசு ஹரியானாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது," என்று அமைச்சர் கூறினார், மேலும் யமுனை நீரின் பங்கீடு தொடர்பான பிரச்சினைகள் வெப்ப அலை நிலைமைகள் தணிந்த பிறகு விவாதிக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

click me!