Ayodhya Ram Temple : அயோத்தியில் பெய்த கனமழையால், ராமர் கோவிலில் மழை நீர் ஒழுகியதாக வெளியான தகவல் குறித்து, அந்த கோவிலின் கட்டுமான குழு தலைவர் விளக்கமளித்துள்ளார்.
அயோத்தியில், ராமர் கோவில் திறக்கப்பட்ட ஓராண்டுக்குள், கோவிலின் கருவறையில் மழைநீர் தேங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது குறித்த வீடியோ ஒன்றும் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலானது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் அக்கோவிலின் கட்டுமானக் குழுத் தலைவர், ஸ்ரீ நிருபேந்திர மிஸ்ரா, தண்ணீர் தேங்கியுள்ள விவகாரம் குறித்து அறிக்கை அளித்துள்ளார்.
நிருபேந்திர மிஸ்ரா வெளியிட்ட தகவல்
"நான் அயோத்தியில் தான் இருக்கிறேன், முதல் மாடியில் இருந்து மழை நீர் வழிவதை நான் பார்த்தேன். இரண்டாம் தலத்தில் உள்ள குரு மண்டபத்தில், மேற்க்கூரை திறந்திருப்பதால் மழை நீர் உள்ளே வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதே சமயம் முதல் தளத்தில் வேலைகள் நடந்து கொண்டிருப்பதால், அந்த வழித்தடத்தில் இருந்து சிறிது நீர் கசிவு ஏற்பட்டுள்ளதையும் பார்த்தேன்".
சனியால் ஜூன் 30ஆம் தேதி முதல் பணமழையில் நனைய போகும் 5 அதிஷ்ட ராசிகள்...!
"அங்கு நடைபெறும் வேலைகள் முடிந்ததும் அந்த வழித்தடம் மூடப்படும். சன்னதியில் வடிகால் வசதி இல்லை, ஏனெனில் அனைத்து மண்டபங்களில் சேரும் நீர் மற்றும் சன்னதியில் உள்ள நீரை வெளியேற்றுவதற்கான சரிவை பொறுத்துள்ளன. வடிவமைப்பு அல்லது கட்டுமானப் பிரச்சினை இங்கு எதுவும் இல்லை". மேலும் கட்டுமானத்தில் உள்ள மண்டபங்கள் திறந்திருக்கும்போது மழை உள்ளே வர வாய்ப்புகள் உள்ளது" என்றார்.
மழைநீர் இப்படி தேங்கி நின்றால், 2025 ஜூலைக்குள் கட்டுமானப் பணிகளை முடிக்க இயலாது என தலைமை அர்ச்சகர் தெரிவித்துள்ளார். மேலும், முழு சம்பவம் குறித்தும் அவர் விசாரணை நடத்தியுள்ளார். இந்த ஆண்டின் முதல் மழைக்குப் பிறகு, ராம்லாலா சிலை நிறுவப்பட்ட செகேனாவுக்கு தண்ணீர் வரத் தொடங்கியது என்றும் அவர் கூறினார்.
கோவிலின் உள்கட்டமைப்புகளில் உள்ள பிரச்னைகள் குறித்து ஆராய வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், இப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணாவிட்டால், கனமழை பெய்யும் போது பூஜை செய்வது கடினமாகிவிடும் என்றார் அவர்.
நிலம் இருந்தும் வீடு கட்ட முடியவில்லையா..? உடனே இந்த 2 பரிகாரங்கள் செய்ங்க.. வீடு கட்டுவது உறுதி!