Beauty Tips : இனி பார்லர் போகாமலே உங்கள் முகத்தை ஆழமாக சுத்தம் செய்யலாம்.. டிப்ஸ் இதோ!

First Published May 4, 2024, 2:37 PM IST

கோடையில் உங்கள் முகத்தில் உள்ள துளைகளை சுத்தம் செய்வதற்கும், முகம் எப்போதும் பொலிவாக இருப்பதற்கும் வீட்டில் சில இருக்கும் பொருட்களைப் பயன்படுத்துங்கள்.

அடிக்கும் கோடை வெயில் தாக்கத்தில் இருந்து நாம் நம் சருமத்தைப் பராமரிக்க ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையான தோல் பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துகிறோம். பருவத்திற்கு ஏற்ப சரும பராமரிப்பு முறையை பின்பற்றுவது முக்கியம். இந்நிலையில், இந்த கோடை பருவத்தில் முகம் பொலிவிழந்து காணப்படுவது மட்டுமின்றி, சில சமயங்களில் முகத்தில் துளைகள் கூட விழும்.

எனவே,கோடையில் உங்கள் முகத்தில் உள்ள துளைகளை சுத்தம் செய்வதற்கும், முகம் எப்போதும் பொலிவாக இருப்பதற்கும் வீட்டில் சில இருக்கும் பொருட்களைப் பயன்படுத்தலாம். குறிப்பாக இந்த பருவத்தில் வெள்ளரிக்காய் சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இது  உங்கள் முகத்தில் உள்ள துளைகளை ஆழமாக சுத்தம் செய்யயும். எனவே, இவற்றுடன்  என்னென்ன பொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்பதை குறித்து இங்கு தெரிந்துகொள்ளலாம் வாருங்கள். 

தேவையான பொருட்கள்: 
வெள்ளரிக்காய்
காபி பொடி
தேன்

வெள்ளரியின் நன்மைகள்: வெள்ளரிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் சருமத்திற்கு ஈரப்பதத்தை வழங்குகிறது. மேலும் இதில் உள்ள கூறுகள் சருமத்தை ஆழமாக சுத்தம் செய்யவும் மற்றும் இதில் உள்ள தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்ற கூறுகள் முகத்தில் உள்ள துளைகளின் அளவை அதிகரிக்காமல் தடுக்கவும் பெரிதும் உதவுகிறது.

காபி பொடியின் நன்மைகள்: காபி பொடி சருமத்தில் இருக்கும் துளைகளை ஆழமாக சுத்தம் செய்யவும், சருமத்தில் இருந்து தோல் பதனிடுவதை நீக்கவும், சருமத்தை பொலிவாகவும், சருமத்திற்கு இயற்கையான ஸ்கரப் ஆகவும், சூரிய ஒளியால் ஏற்படும் சரும பாதிப்புகளில் இருந்தும் பாதுகாக்கவும், சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்றவும் பயன்படுகிறது.

இதையும் படிங்க: Beauty Tips : கோடையில் முகம் பளபளப்பாக ஜொலிக்க வேண்டுமா..? வெள்ளரிக்காய் தண்ணீரை இப்படி யூஸ் பண்ணுங்க!

தேனின் நன்மைகள்: முகத்தில் உள்ள துளைகளை சுத்தப்படுத்தவும், இயற்கையான முறையில் சருமத்தை வெளியேற்றவும் இது மிகவும் நன்மை பயக்கும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஈரப்பதமாக்கவும், சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்கவும் பெரிதும் உதவுகிறது.

இதையும் படிங்க: வெள்ளரிக்காய் தோல் நீக்காமல் அப்படியே சாப்பிடுவீங்களா? அப்ப முதல்ல இதை தெரிஞ்சிக்கோங்க.!

இவற்றை எப்படி உபயோகிப்பது?
உங்கள் முகத்தில் உள்ள துளைகளை ஆழமாக சுத்தம் செய்யவும், முகம் பொலிவாக இருக்கவும்,  1 வெள்ளரிக்காயை அரைத்து அதை ஒரு பாத்திரத்தில் வைத்து, பிறகு, அதில் சுமார் 1 ஸ்பூன் தேன் மற்றும் அரை ஸ்பூன் காபி பொடி சேர்த்து நன்றாக கலக்கவும். பிறகு, அந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி 5 நிமிடங்கள் வரை மெதுவாக மசாஜ் செய்யவும். இதற்குப் பிறகு, 10 முதல் 15 நிமிடங்கள் வரை அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு தண்ணீர் கொண்டு முகத்தை சுத்தம் செய்யுங்கள். இந்த ஃபேஸ் பேக்கை வாரம் 2 முரை பயன்படுத்தலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!